வணக்கம் இந்த தளத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒருகவிதையை இன்னொரு தளத்தில்...
வணக்கம்
இந்த தளத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒருகவிதையை இன்னொரு தளத்தில் இன்னொரு நபரின்பெயரோடு copy செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது?
பலபேருடைய கவிதைகள் திருடபட்டிருக்கலாம்! அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை..! இன்று என் கவிதை திருடப்பட்டுள்ளது...ஒரு தாய் தன குழந்தையைப் பெற்றெடுக்க,படும் அவஸ்தையை ஒரு கவிஞன் அடைகிறான் என்பது உண்மை.. என்னால் பிரசவிக்கப்பட்ட என் கவிக்குழந்தையை திருடுவது என்பதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை...ஆதலால்,இந்தத் தளத்தில் எழுதினால்தான் நான் எழுத்தாளன் என்று நிருபிக்கவேண்டிய அவசியம் இல்லை...நான் நிறைய கனவுகளோடு வளர்ந்து கொண்டிருப்பவன்,இப்படி திருடும் வக்கிரமா புத்தி எதற்கு..?இனிமேல் எனது படைப்புகளை வெளியடப்போவதில்லை...நண்பர்களின் படைப்பை வாசித்து கருத்துகள் மட்டுமேதரப்போகிறேன்...இது என் தனிப்பட்ட முடிவு...நாளைக்கு உங்களுக்கும்நேரலாம்..! அப்பொழுதுதான் அந்த வலி உணரமுடியும் என்று நினைக்கிறேன்..!இன்று என் கன்னத்தில் விழுந்த அடி உங்களுக்கும் பிரதிபலிக்கலாம் ..உசார்..நல்ல படைப்பாளியை உயிரோடு குழிதோண்டி புதைக்கிறது. எழுத்து தளம்.இது என்னை மட்டும் சொல்லவில்லை.அப்படி எடுத்துக்கொண்டாலும் அது நிஜம் ..!நண்பர்களே..,கொஞ்சம் சிந்தியுங்கள்...பத்து வருடமாக சிறுகச் சிறுகச் சேமித்துவைத்த பணத்தை ஒருநொடியில் கொள்ளை அடித்தால் எப்படி இருக்கும்? பணம் போனால் சம்பாதிக்கலாம்...சிந்தனை போனால் சிந்திக்கலாம்..!உங்களுடைய உரிமை போனால் ..? சிந்திக்கவும் ...??????
எழுத்து தளம் காப்பி செய்ய முடியாத அளவிற்கு கவிதை,கதை பக்கங்களை மாற்றலாம் என்று நினைக்கிறேன்...அப்படிச் செய்தால் நான் நிச்சயம் எழுதுவேன்..
நன்றி