எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர் நல்லகண்ணு...... பொதுவாழ்வில் நேர்மை , அரசியலில் தூய்மை...

தோழர் நல்லகண்ணு......


பொதுவாழ்வில் நேர்மை , அரசியலில் தூய்மை , வாழ்வில் எளிமை ....பொதுவுடைமைக் கொள்கைக்கு வாழ்வை அர்ப்பணம் செய்துக் கொண்ட தனித்தன்மை என  வாழும் தோழர் இரா. நல்லக்கண்ணு (RNK) தனது 91ஆம் பிறந்தநாளையும் கூட பெரியதாக எண்ணி விழாக் கோலம் காணவில்லை !

தொலைந்துப்போன வானவில் எனும் இருமொழி வழி பன்னாட்டுப்படைப்பாளிகளின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு  அவருக்கு காணிக்கையாக்கி அளித்து அவரின் பிறந்தநாளைக் கொண்டாடினோம் .

சென்னை தி.நகர் சிஐடி நகரில் அண்மை அடர் மழையால் பாதிக்கப்பட்ட தன் வீட்டைச் செப்பமிட்டுக்கொண்டிருந்தார் தோழர்.தான் சேர்த்து வைத்திருந்த புத்தகங்கள் மழையில் அழிந்த கவலையை மகாகவி ஈரோடு தமிழன்பனோடு பகிர்ந்துக். கொண்டார்.

ஆஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த அறை அது . சிவப்பு நிறத்தில் 3 பழைய இருக்கைகள். 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ,  தனக்கு வந்த முழு அன்பளிப்பு தொகையை அப்படியே கட்சிக்கு அளித்த , ஒரு வேட்டி , துண்டு , சாதா அரைக்கை வெள்ளைச் சட்டை அணிந்த பகட்டு இல்லா ஒரு மக்கள் தொண்டனை காண வாழ்த்த வாழ்த்துப்பெற வாய்ப்பு ஏற்படுத்திய மகாகவிக்கு நானும் , விழிகள் நடராசனும் நன்றி அறிவித்தோம்.

ஒரு மெய்யான காம்ரேட்டை வாழ்த்தி வணங்கிய மகிழ்வும் பெருமித துள்ளலும் எங்கள் நடையில் கண்டதாக தோழர் பழனி ( எங்கள் காரோட்டி) கூறினார்....!!

பதிவு : agan
நாள் : 28-Dec-15, 9:58 am

மேலே