உனக்குத்தான் இக்கவிதை--அகன் சூரிய மரத்தின் கூரிய கனிகள் களைப்போடு...
உனக்குத்தான் இக்கவிதை--அகன்
சூரிய மரத்தின் கூரிய கனிகள் களைப்போடு எப்போது காய்ப்பதை நிறுத்தியது....?
கிழக்கு வாசலில் உழக்கு சோம்பலோடு வெளிச்சப் புறப்பாடு எப்போது தாமதமானது.....??
முழுவானம் எப்போது பிழையாய் விடிந்திருக்கிறது.....???
குறை ஒளியை எப்போது முழு நிலவு அளித்துள்ளது.....????
மலர்களைத் தேர்ந்தெடுத்தா காற்று தழுவிச்செல்கிறது......?????
உண்பவர் தன்மை ஆய்ந்தா உழவுப்பயிர் விளைகிறது......??????
பிறகென்ன , எவரிடமும் எப்போதும் சிரித்துத்தான் போயேன்... தோழமையோடு வாழ்ந்துதான் பாரேன்_
இன்றுப் பிறந்த ஆண்டின்
முதல் நாளிலிருந்து...!