கனவுகள்அர்த்தமற்றதா ????? பூங்கோதையின்அத்தை, மாமா, அப்பா, அம்மா,உறவினர்கள் என...
கனவுகள்அர்த்தமற்றதா ?????
பூங்கோதையின்அத்தை, மாமா, அப்பா, அம்மா,உறவினர்கள் என வீடே திருவிழாகோலமாக இருந்தது. குழந்தைகள் அங்கும் இங்குமாக ஓடிவிளையாடி கொண்டிருந்தார்கள்.பூங்கோதைமட்டும் தனி அறையில் அமைதியாகதன் கணவனை பற்றி சிந்தித்துகொண்டிருந்தாள்.
அவள் காலையில் இருந்து பட்டினியாக இருப்பதைஅறிந்த அவளின் அத்தை அவளைசமாதானம் செய்து சாப்பிட வைப்பதர்காகஅவள் அறைக்கு வந்தாள். பூங்கோதையைகண்டதும் அவளுக்கு என்ன பேசுவதென்று அறியாமல்அவளது கண்களும் குலமாகியது. பூங்கோதையின் மோவாயை திருப்ப பூங்கோதைக்குஅவளின் அத்தையை கண்டதும் தூக்கம்தொண்டயை அடைக்க அழ ஆரம்பித்துவிட்டாள். அழாதேம்மா.. உன் தூக்கதிர்கெல்லாம் அழுது தீர்த்ததெல்லாம் போதும்இரவுலருந்து அழுதுட்டே இருந்தா எப்படி உன்அப்பா அம்மா எல்லாம் வந்துருக்காபங்கஅவங்கள வந்து பாருமா என்றுதன் அன்பு மருமகளை அழைத்தாள். அப்பா அம்மா கிட்ட மனம்விட்டு பேசுமா இன்னும் சிலமணி நேரம் தான் அவன்வந்துடப்போரான் என்று போன வருடம்இதே நாளில் தங்களை பிரிந்துசென்ற அவளது மகன் தமிழரசனைநினைந்து கொண்டாள்.பூங்கோதையும்தமிழரசனும் பள்ளி பருவத்தில் இருந்தேநண்பர்கள்..
தமிழரசன் 12 வகுப்பிற்க்கு மேல் படிப்பை தொடரமுடியாத குடும்ப சூழ்நிலை தமிழரசனின்உழைப்பில் தான் அவனது தங்கை மேகலையின் திருமணத்தை முடித்திருந்தான் ஆனால்பூங்கோதை ஆசிரியர் பட்ட படிப்பை முடித்தவள்.கல்வி தகுதி பொருந்தவில்லை எனினும்மனம் பொருந்திய இருவரும் காதலித்து பெற்றோர்களின்சம்மதத்தோடுதிருமணம் செய்துக்கொண்டனர்.பூங்கோதையின்வீட்டாருக்கு முழு மனம் இல்லைஎனினும் தமிழரசனின் ஒழுக்கம் மற்றும் பொறுப்பான செயல்களின்காரணமாக திருமணத்திற்க்கு ஒப்பு கொண்டனர். திருமணம்ஆகி மூன்று மாத காலத்திலேயேபூங்கோதையை விட்டு தமிழரசன் பிரியும்நிலை ஏற்பட்டது. அவர்கள் அந்த மூன்றுமாத காலத்தில் இன்பமாக இருந்த தருணங்கள்செல்ல சண்டைகளையெல்லாம் நினைத்து பார்த்து கொண்டிருந்தாள்.பூங்கோதையின்அறையில் இருந்து வரும் குழந்தையின்அழு குரல் கேட்டு பூங்கோதையின்அம்மா அவள் அறைக்கு வந்தாள்.தன் நிலை மறந்து அமர்ந்திருந்தவளைஅம்மாடி பூங்கோதை பூங்கோதை குழந்தை அழுவுது பாலூட்டுமாநாம பசி தாங்குவோம் ஆனாகுழந்தை தாங்குமா சொல்லு என்று கூறியவாறே மகளின் நிலை நினைத்துஅந்த அறையை விட்டு வெளியேறினாள். பூங்கோதைகடந்த நினைவுகளில் இருந்து வெளிவந்து தன்குழந்தை அழுகயை நிருத்த பாலூட்டமெல்ல அழுகை குரல் அடங்கியது.. பூங்கோதை பூங்கோதை இங்கவந்து பாரு யார் வந்துருக்கானுஎன்று அவளது அத்தையின் குரலில்இருந்த ஆனந்தத்தை கண்டே அறிந்து கொண்டாள்வந்திருப்பது தன் கணவன் தமிழரசன்என்று அறிந்த அவளுக்கு அழுகயைஅடக்க முடியவில்லை உலகமே ஒரு கனம்நின்றது.. சென்ற வருடம் இதே நாளில்பிரிந்து சென்றவன் இன்று தான் திரும்பிவந்துள்ளான். அவனே உலகம் என்றுநம்பி வந்த பூங்கோதை விட்டுசென்றதை எண்ணி அவளுக்கு கோபம்இருந்தாலும் அதில் தமிழரசன் குற்றம்ஒன்றும் இல்லை என்று அறிந்திருந்தபூங்கோதை தன்னை தானே சமாதானம்செய்து கொண்டு குழந்தையை தோலில்சாய்த்தவாறு அவள் கணவனை காணஓடோடி சென்றாள்.தமிழரசன்அவளை விட்டு சென்ற போதுபூங்கோதை இரண்டு மாதங்கள் கர்பம்என்று அவனுக்கு தெரியாது ஏன் பூங்கோதைக்கே தெரியாதுமயங்கிய நிலையில் இருந்த பூங்கோதையை பரிசோதித்துமருத்துவர் சொன்ன பிறகே அவளுக்கும்தெரியும். தான் கர்பம் அடைந்ததை தன்கணவனிடம் சொல்ல முடியாத சூழ்நிலைஅவள் அதைசொல்ல இன்னும் ஒரு வருடம்காத்திருக்க வேண்டிய கட்டாயம். தமிழரசனின்நல் செயல்கலுக்கேற்ப பூங்கோதை சுக பிறவிசித்து ஆண்மகனை பெற்றெடுத்தாள்.கையில்குழந்தையோடு பூங்கோதையை கண்ட தமிழரசனுக்கு ஒன்றும்புரியவில்லை. அவள் கண்களை நோக்கிஅவன் கேக்க ஆம் இதுநம் குழந்தைதான் என கண்களாலே பதில்அளித்தாள். தமிழரசனின்ஆனாந்தத்திர்கு அளவே இல்லை...
தன் மனைவியை தனியாக விட்டுவிட்டு செல்கிறோமே என்று மன வருத்ததோடுஇருந்த தமிழரசனுக்கு அவளுக்கொரு துணையை விட்டு சென்றுருப்பதைஎண்ணி மன திருப்தி. தமிழரசன்விரும்பி சாப்பிடும் பலகாரங்களை யெல்லாம் அவனுக்கு அளித்தார்காள். என்னவேண்டும் என்று அவனிடம் கேட்டுகொண்டு மதியம் சமைக்க பூங்கோதையின்அத்தையும் அம்மாவும் சமயலறை சென்றனர்.தமிழரசனும்பூங்கோதையும் அழுகையையும் துக்கத்தையும் தள்ளி வைத்து அந்தநாளை இன்பமாக கழிக்க முடிவுசெய்தனர். மதிய உணவை பூங்கோதையே பரிமாறினாள்.அந்த வருடத்தில் நடந்த நல்லது கேட்டது,என எல்லாவற்றயும் பூங்கோதை சொல்லிகொண்டிருந்தாள்.தன் பணி நேரம் முடிந்ததைஅறிந்த சூரியன் சந்திரனுக்கு இடமளிக்கஆயத்தம் ஆகி கொண்டிருந்த நேரம் பூங்கோதையின்மனம் பதைக்க ஆரம்பித்தது தான்பதற்றத்தை சற்றே ஒதுக்கி தமிழரசனிடம் அருகில்உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியைவேலை கிடைத்துள்ளதையும் குழந்தையின் எதிர் காலத்தை எண்ணிகவலை பட வேண்டாம் என்றுபக்க பலமாக நம்பிக்கை அளிக்கும்வார்த்தைகளை ஆறுதலாக கூறி கொண்டிருந்தாள்.கலக்கமும்அச்சமும் பூங்கோதையை சூழ்ந்து கொண்டது ...
அம்மா என்று அழைத்த தமிழரசனின்குரலை கேட்டதும் அவனின் அம்மாவிற்க்கு தூக்கம்தொண்டையை அடைத்தது...மகன் தன்னிடம் விடைபெறவே அழைக்கிரான் என்ற உண்மை அறிந்தஅவளின் கண்களை விட்டு கண்ணீர்அகலவில்லை.
தமிழரசன்மறுபடியும் அவன் மனைவி பூங்கோதையைபிரிய வேண்டிய காலத்தின் கட்டாயம்.. தமிழரசனுக்காகபூங்கோதை ஒரு வருடம் முழுவதும்காத்திருக்க வேண்டும். தமிழரசனின் பிரிவு ஒரு புறம்இருந்தாலும் தான் கற்பமுற்றிறுந்ததை தமிழரசன்ஒரு வருடம் கழித்தாவது தெரிந்துகொண்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள்.வெளியூருக்குபோய்தான் சம்பாதிக்கணும்னு இல்ல இங்கயே கூடஇருக்குற வேலைய செய்து பிழைத்துக்கொள்ளலாம்என அவனை தடுத்து கூறயாரும் இல்லை...
ஏனெனில்தமிழரசன் இதே தினம் கடந்தஆண்டு பிரிந்து சென்றது பணியின் நிமித்தமாகஅல்ல !!!சென்ற வருடம் தமிழரசனும் பூங்கோதையும்சினிமா பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில்வீடு திரும்பும் போது லாரியில் மோதிதமிழரசன் அந்த இடத்திலேயே உயிர்பிரிந்தான். ஆம்!!! தமிழரசன் இறந்து இன்றோடு ஒருவருடம் முடிந்திருந்தது...
மூன்று வருடங்களுக்குமுன் ஊர் காவல் தெய்வத்திற்க்குநடந்த திருவிழாவில் அந்த கிராம மக்களின் தெய்வபக்தியின்காரணமாகவும் நற் பண்பிநாளும் கவரப்பட்டகடவுள் காட்சி தந்து இனிஇந்த கிராமத்தில் 50 வயதிற்க்கு கீழ் இருப்பவர் யார்உயிர் நீர்த்தாலும் ஒவ்வொரு ஆண்டும் அதேதினத்தில் ஒரு நாள் மட்டும்உயிர் பெற்று வரும் வரத்தைதந்து மறைந்தது. அதன் காரணமாக தமிழரசன் அவள்மனைவி குழந்தையை மறுபடியும் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
இரா.கனிமொழி