மரம் மனிதனின் விதை !!! என்னங்கஇப்படி சொல்ரிங்க.. இதெல்லாம்...
மரம் மனிதனின் விதை !!!
என்னங்கஇப்படி சொல்ரிங்க.. இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா..நடக்குற விஷயமா பேசுங்க என்றுஅம்மா ஏளன சிரிப்போடு அப்பாவ பாத்து கேக்குறாங்க..நான் என்னடி என்விருப்பதயா சொல்றன் நாளிதழ்ல போட்டிருக்கர்த படிச்சி சொல்ட்ரன்னுஅப்பா சலிச்சிகுறார்... அப்படிஅப்பா எதை படித்து சொல்லஅம்மா இப்படி நகைக்குராங்கனு அறியஆர்வம் என்ன தூண்ட பூத்தையலபாதியிலே நிறுத்திட்டு அப்பா கையில் இருந்தநாளிதழ வாங்கிட்டு வந்துட்டன்.. அடுப்பான்கரையிலருந்துகரண்டியோட வருவாங்கனு பேரு அம்மா என்னடானா எப்போதுமேகேள்வியோடயே வராங்க..அப்பா கிட்ட வம்புக்குவாய் கொடுக்களனா தூக்கம் வராதே...
ஜனநாயகநாடுனு சொன்னா மட்டும் போதுமா இப்படி மரத்த வெட்டினா கூடவாஅபராதம் போடுவாங்க???அப்பாவுக்குவாய்க்கு வேலை வந்துவிட்டது, பின்ன மதில் சுவர் போடுரன் , வீட்டவலத்தி கட்டுரன், கார் நிருத்த இடம்இல்லை அப்படி இப்படினு காரணம்சொல்லிட்டு மரத்த வெட்ட முடியாதுபாரு...
2005 லநாசா வெளியிட்ட அறிக்கைல 400 பில்லியன் மரங்களும் 6 பில்லியன் மக்களும் பூமியில இருக்கர்தா புள்ளிவிவரம் கொடுத்தாங்க.. அதாவது ஒரு மனிதனுக்கு60 மரங்கள்அப்படின்ற சரி விகிதத்துல வாழ்ந்துருகோம்...ஒரு மனிதன் ஒரு வருடத்துலமட்டும் 9.5டன் காத்து சுவாசிகுரோம்னும்அதுல வெறும் 23 % மட்டுமே ஆக்ஸீஜன் மீதம்இருக்குற 77 % மாசுதான். அதாவது சராசரியாக ஒருமனிதன் 740 கிலோ கிராம் ஆக்ஸீஜன்சுவாசிக்குரான்.
இதற்கு7 முதல் 8 மரங்களாவது தேவைப்படுது ஒரு மனிதன் உயிர்வாழ..
இதையெல்லாம் கருத்துல வச்சதாள தான் அரசாங்கம்இப்படி ஒரு அதிரடி முடிவெடுத்துஒரே இரவுல செயல் படுத்திருக்காங்க.மரத்த வெட்டினா ஒவ்வொரு மரத்துக்கும் அபராதம்1000ரூபாய் அறிவிச்சுருக்கு..அம்மா குறுக்கிட்டு நம்ம வீட்டில வெட்டுறமரம் அரசாங்கத்துக்கு எப்படி தெரிய போகுது???.. அதற்குத்தான்நாளைக்கே அரசாங்கம் மரம் கணக்கெடுப்பு வேலையைஆரம்பிக்க போகுது..
எப்படிமக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்லஇருக்கோ அதே மாதிரி மர த் தொகை கணக்கெடுப்பும்செயல் படுத்த போறாங்க..அதனால்யார் யார் வீட்டில எத்தனமரம் இருக்கு அப்படீன்ற கணக்குஅரசாங்க பதிவேட்டுல வந்துடும்...
அது எப்படிங்க இது என்ன சுலபமாஆகுர காரியமா என்ன அதுக்குன்னுஅரசாங்கம் எத்தன அதிகாரிகள நியமிக்கும்னுஅம்மா அப்பாவ விட்ரமாதிரி இல்ல..
அதுக்குதான்அரசாங்கம் அந்த பொறுப்ப அந்தஅந்த பகுதிய சார்ந்த கல்லூரிநிர்வாகத்துக்கிட்ட ஒப்படச்சிருக்கு..அதற்காகும் செலவுக்கான பட்டியல அந்தந்தகிராம நிர்வாகம், நகராட்சி, மாநகராட்சிக்கு அனுப்பி வச்சிருக்கு செலவுக்கானதவைப்பு தொகையிலருந்து எடுத்துக்க சொல்லிருக்காங்க.... இதற்கானஒத்துழைப்ப தரும்படி கல்லூரி நிர்வாகத்திடம் அரசாங்கம்வேண்டுக்கோள் விடுத்துருக்கு... இன்னும்ஒரு மாத காலதுல இந்தவேலையை செய்து முடிக்கரதா அரசாங்கம்தீர்மானமும் நிரைவேத்திருக்கு மரம் வளர்ப்போம் !!! மரம் காப்போம் !!!
இந்ததிட்டத்தோட மற்றோரு சிறப்பம்சமே.. இனிமேல்பத்திர பதிவு பண்றவங்க நிலம்மட்டும் வச்சிருந்தா போதாது நிலத்துல எத்தனமரம் வச்சிருக்காங்க என்கிற தகவலயும் தரனும்அதிகாரி நேரடி பார்வைல சரிபார்த்த பிறகே பத்திர பதிவுசெய்ய முடியும், நிலத்தின் பரப்பளவ பொறுத்து மரத்தோடஎண்ணிக்கை மாறுப்படும்.
படிக்கவும்கேக்கவும் நல்லாருக்கே இந்த அற்புத காரியம் நிறைவேற்றப்போ எப்படி இருக்கும்னு கண்ணமூடி பார்த்த எனக்கு கண்திறந்து பாக்கவே பயமா இருக்குஎங்க இதெல்லாம் வெறும் கனவா இருக்குமோனு....
இரா.கனிமொழி