எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்மை புதிது!!!!!! அவள் எதிர்பார்த்த, பயந்த, அந்த நாள்வந்துவிட்டது.....

பெண்மை புதிது!!!!!! 


அவள் எதிர்பார்த்த, பயந்த, அந்த நாள்வந்துவிட்டது.. அவளுக்கோ ஓர் கலக்கம், அச்சம்,ஏக்கம், எதிர்பார்ப்பு.. அவளின் என்ணத்திர்கேற்ப அந்தநாளும் இனிதே கடந்து செல்ல,அடுத்த நாள் காலை விடிகிறதுஅன்றும் ஒன்றும் நடக்கவில்லை என்றுஅறிந்த கணத்தில் மகிழ்ச்சி இரட்டிபாகிறது... 

ஒவ்வொரு நாளும் சூரியனுக்கும்சந்திரனுக்கும் இடையில் அவள் தவிப்பு முள் மேல் பனிதுளிதான்,இரட்டிபான மகிழ்ச்சி நூறு நாட்கள் கடந்து நூறாக பெருக அவள் களக்கம் சற்றே தளர்ந்துபெரு உவகை... 
அவளின்இத்தகய  உவகைக்குகாரணம் என்னவாக இருக்க கூடும்….
அவளின்மடியில் தவழ இருக்கும் தன்குழந்தையை எண்ணியா... 
இல்லை இல்லை !!!
இந்த பத்து மாதங்கள் அவள்குடும்பமே அவளை கொண்டாடவிறுப்பதை எண்ணியா….
இல்லை இல்லை !!!பின்னர்.....

நாட்கள்  நூறையும்கடந்து அவள் தாய்மை அடைந்ததை இந்தஉலகுக்கு உறக்க கூற தான் மலடி இல்லை என்று...

பெண்மைக்குள்அதுவும் தாய்மைக்குள் இத்தனை சுயநலமா ????

ஆம்.. சுயநலமே…ஒவ்வொருபெண்ணும் சுயநலவாதிகள்தான்...

தன் கரம் பிடித்தவனின்கரம் பிடித்து கூற… உன் தலைமுறைஎன்னுள் என்று !!!!

இரா.கனிமொழி  

நாள் : 7-Jan-16, 9:41 am

மேலே