அறிவுப்பசிபோக்கும் புத்தக கண்காட்சிகள் பெருகவேண்டும்: மத்திய அமைச்சர் அனந்த்குமார்...
அறிவுப்பசிபோக்கும் புத்தக கண்காட்சிகள் பெருகவேண்டும்:
மத்திய அமைச்சர் அனந்த்குமார்
அறிவுப்பசிப்போக்கும் புத்தக கண்காட்சிகள் ஆங்காங்கே பெருக வேண்டும் என்று மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார்.பெங்களூரு, நேஷனல் கல்லூரி வளாகத்தில் இன்று ஸ்ருஷ்டி வென்சர்ஸ் நிறுவனத்தின் 8-ஆவது புத்தக கண்காட்சியை தொடக்கிவைத்து அவர் பேசியது:பெங்களூருவில் குறிப்பாக பசவனகுடியில் ஆண்டுதோறும் கடலைக்காய் திருவிழா நடத்தப்படுகிறது. அதேபோல, கடந்த 8 ஆண்டுகளாக புத்தக திருவிழா நடந்து வருகிறது. இன்றைய இளைய சமூகம் அறிவுப்பசியால் தவித்து வருகிறது.அறிவுப்பசியை போக்குவதற்கு இதுபோன்ற புத்தக கண்காட்சிகள் உதவியாக இருக்கின்றன. எனவே, இதுபோன்ற புத்தக கண்காட்சிகள் ஆங்காங்கே நடத்தப்படவேண்டும்.இந்தகண்காட்சியை காணவரும் மாணவச்செல்வங்களுக்கு இலவசமாக புத்தகங்கள் அளிப்பதுவரவேற்கத்தக்கது. இது மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை விதைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்.கர்நாடக புத்தக ஆணையத்தின் முன்னாள் தலைவர் சித்தலிங்கையா பேசியது: இளைய தலைமுறையினரிடையே புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் மலர்ந்தால் தான் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். அது பண்புசார் சமுதாய வளர்ச்சிக்கு வழிகோலும். கண்காட்சிக்கு மாணவர்களை வரவழைக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதுவரவேற்கத்தக்கதுஎன்றார் அவர். இந்த கண்காட்சி ஜன.11-ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது.