எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாரம்பரிய மரங்களை பாதுகாக்க மாதம் ஒரு பயணம்: மண்ணின்...

பாரம்பரிய மரங்களை பாதுகாக்க மாதம் ஒரு பயணம்: மண்ணின் மரங்கள் ஆய்வுக் குழுமத்தின் புது முயற்சி ;

 பாராட்டக்கூடிய செய்தித் தொகுப்பு;
.சண்முகசுந்தரம்1பழமையான மரத்தின் அருகே குழுமியிருக்கும் ‘மண்ணின் மரங்கள் ஆய்வுக் குழுமத்தினர்’ மற்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் கா.கார்த்திக் பழமையான மரத்தின் அருகே குழுமியிருக்கும் ‘மண்ணின் மரங்கள் ஆய்வுக் குழுமத்தினர்’ மற்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் கா.கார்த்திக்தமிழ் மண்ணின் பாரம்பரிய மரங்களை பாதுகாப்பது தொடர் பாக விழிப்புணர்வை ஏற் படுத்தி அதன் பண்பாட்டுத் தொடர்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது மதுரையிலுள்ள ’மண்ணின் மரங்கள் ஆய்வுக் குழுமம்’.தமிழ் மண்ணின் மரங்களான அழிஞ்சி, மருதம், இலுப்பை, வெள்வேலம், கூகைமுட்டி உசிலை, வேம்பு, கடம்பம் உள் ளிட்ட மரங்கள் கொஞ்சம் கொஞ்ச மாக அழிக்கப்பட்டு அவற்றுக்கும் மக்களுக்கும் உண்டான பண் பாட்டுத் தொடர்புகளும் மறக் கடிக்கப்பட்டு வருகின்றன.சாலை விரிவாக்கம், நகரமய மாக்கல் என்ற பெயரில் நமது மண்ணுக்குச் சொந்தமான மரங்கள் தயவு தாட்சண்யமின்றி வெட்டிச் சாய்க்கப்படுவது ஒருபுறமிருக்க, விரைந்து வளர வேண்டும் என் பதற்காக, நமது மண்ணுக்கு சம்பந்தமில்லாத தூங்குமூஞ்சி, மயில் கொன்றை உள்ளிட்ட மரக் கன்றுகள் நடப்படுகின்றன. இந்த நிலையில்தான் நமது பாரம்பரிய மரங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது மண்ணின் மரங்கள் ஆய்வுக் குழுமம்.இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கா.கார்த்திக், ’’நமது மண்ணுக்குச் சொந்தமான மரங்களில்தான் பல்லுயிர் சூழல் இருக்கிறது. சில பறவைகள் குறிப்பிட்ட சில மரங்களில் மட்டுமே கூடுகட்டும்.வேப்ப மரம் கசப்பானதுதான் என்றாலும் அதில்கூட சில பூச்சிகள் வளர்கின்றன. கிராமங் களில் இன்றைக்கும் மரங்களை தெய்வமாக வழிபட்டுக் கொண் டிருக்கிறார்கள்.அந்த மரங்களுக்கு அருகே செருப்புக் காலுடன் செல்ல மாட்டார்கள். அவை முன் எப்போதோ ஒரு காலத்தில் அந்த கிராமத்து மக்களின் தீராத வியாதிக்கு மருந்தாக பயன்பட் டிருக்க வேண்டும். அதனால்தான் அவற்றை தெய்வமாக வணங்கு கிறார்கள். அந்த மரங்கள் பற்றி இணையத்தில் தேடினால் வேரிலிருந்து நுனி வரைக்கும் உள்ள அவற்றின் மருத்துவ குணங் கள் பிரமிக்க வைக்கின்றன.இப்படிப்பட்ட இயல்புடைய மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு அயல் மரங்களைக் கொண்டு வந்து நடுவதன் மூலம் பல்லுயிர் பெருக்கத்தை நாம் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.சீமைக் கருவேல மரத்தை இறக்குமதி செய்ததன் ஆபத்தை 60 ஆண்டுகள் கழித்துத்தான் நாம் உணர ஆரம்பித்திருக்கிறோம். ஆனாலும் அவற்றை அழிக்க முடியாமல் போராடிக்கொண்டி ருக்கிறோம்.வரும் காலங்களில் இன்னும் இப்படிப் பல மரங்கள் நமது பல்லுயிர் பெருக்கத்துக்கும் மண்ணின் வளத்துக்கும் சவாலாய் வளர்ந்து நிற்கும். இதை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காகவும் நமது பாரம்பரிய மரங்களை பாதுகாக்கவும்தான் இந்தப் பயணத்தைத் தொடங்கி இருக் கிறோம்’’ என்றார்.நிறைவாக அவர், ’’மண்ணின் மரங்களுடனான நமது பண் பாட்டுத் தொடர்புகளை ஆவணப் படுத்துதல், மண்ணின் மரங்களை மக்களிடம் பரப்புதல், அவற்றின் விதைகளைச் சேகரித்தல், ஏரிக் கரையில் பனை விதைகளை விதைத்தல். இவைதான் எங்கள் பயணத்தின் முக்கிய நிகழ்வுகள்.ஏரிக் கரைகள் உடையாமல் பாதுகாப்பதிலும் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பனைகளை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை மீண்டும் உருவாக்கவே கண்மாய் கரைகளில் பனை விதைகளை நடுகிறோம்.இதுவரை மதுரை மாவட்டத்தில் மாதத்துக்கு ஒரு ஞாயிறு வீதம் பயணம் செய்து ஏழு கோயில் காடுகளில் மக்கள் தெய்வமாக வழிபடும் பதினைந்துக்கும் மேற்பட்ட மண்ணின் மரங்களை ஆவணப்படுத்தி இருக்கிறோம். அடுத்ததாக மதுரை - ராமேசுவரம் சாலையில் விரகனூர் அருகே கல்லம்பு கிராமத்தில் வெள்வேல் மரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜனவரி 10-ம் தேதி (இன்று) அந்த கிராமத்துக்கு பயணம் செய்கிறோம்.மதுரை மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு அந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களையும் ஆவணப்படுத்த இருக்கிறோம்’’ என்றும் சொன்னார்.

நாள் : 11-Jan-16, 1:42 am

மேலே