மாடு ம்மா.... என்று பசியால் கத்திடா மனசால் செத்து...
மாடு ம்மா.... என்று பசியால் கத்திடா மனசால் செத்து போய்டுவான் தமிழன். தான் பட்டினி கிடந்தாலும் மாட பட்டினி போட மாட்டான். மாடு உடல் நிலை சரியிலாமல் இறந்து போனா ஒரு வாரம் நல்ல சோறு சாப்பிட மாட்டான், மாட்ட விற்றுட்ட ஏதோ எல்லாம் போன மாதிரி மூஞ்ச தூக்கிட்டு சுத்திட்டு இருப்பான்.. கோவதுல ஒரு அடி அடிச்சிபுட்டா அப்புரம் போய் அடிச்சிடனா அடிச்சிட்டனானு தடவி தடவி கொடுப்பான். பாத்து பாத்து தவிடு போட்டு புண்ணாக்கு போட்டு போத்தி போத்தி வளப்பான்... அவன போய் மாட்ட வதைக்ற கொடுமை படுத்துரன் என்று சொன்னால் இந்த நாடு வெலங்குமா??. கண்ட கண்ட பயலுங்க எல்லாம் இதை வரவேற்கிறேன் சொல்ரான் சொல்ர ஒருத்தன் மாட்ட தொட்டு பாத்து இருப்பானா? ஒரு கன்று குட்டி வளர்த்து இருப்பானா? அதுக்கு தவிடு வச்சி, தண்ணீர் வச்சி, புண்ணாக்கு வச்சி, புல்லு புடுங்கி போட்டு இருப்பானா? டன் கணக்கில் மாட்டு கறி ஆட்டு கறி ஏற்றுமதி செய்றிங்களே எத்தனை ஆடு மாடுகளை கொன்று இருப்பானுங்க அது எல்லாம் மாடு இல்லையா டா அய்யோக்கி பயலுங்களா... நாடடா இது தூ....