எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொங்கல் கும்மி பாடல் ********************************* கும்மியடி..பெண்ணே...கும்மியடி குனிந்து... குனிந்து.......

பொங்கல் கும்மி பாடல் 

*********************************

கும்மியடி..பெண்ணே...கும்மியடி 
குனிந்து... குனிந்து.... கும்மியடி
குடியும் . கோ-மகனும்  ஓங்கிடவே 
கும்மியடி..பெண்ணே...கும்மியடி 

விண்ணையும் மண்ணையும் 
இணைத்துயரும் எங்கள் மண்ணின்
மகிமையை  கும்மியடி - மண்ணின் 
மகிந்தர்கள் சிந்திய வியர்வை 
நெல் மணியானதை சொல்லியடி 
கும்மி.... சொல்லியடி ..கும்மியடி..
பெண்ணே...கும்மியடி ..கும்மியடி..
குனிந்து... குனிந்து.... கும்மியடி

சேற்றையே.. சோற்றாக... மாற்றும்
இயற்கை விந்தைக்கு - தலைசாய்ந்து 
ஒருமுறை கும்மியடி பெண்ணே...
வரம்புயர.. குடியுயரும்... குடியுயர 
கோன் உயர்வான் உலக நெறி சொன்ன 
ஒப்பற்ற தாய்க்கு கும்மியடி 
பெண்ணே ...கும்மியடி 
குனிந்து... குனிந்து.... கும்மியடி

உலகமு  ண்ண காரணமாய் நிற்கும்  
உழவன் உழைப்பை சொல்லி கும்மியடி 
பொங்கி வழியும் பொங்கல் பானையிலே 
பொங்கும் எங்கள் இன்பத்தை சொல்லியடி 
கும்மியடி..பெண்ணே...கும்மியடி 
குனிந்து... குனிந்து.... கும்மியடி


நாள் : 14-Jan-16, 11:33 pm

மேலே