எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேறு நிலாக்கள் ***************** ஆப்பிரிக்காவிலிருந்துபேசுகிறேன் ...எழுதுகிறேன் .. இதுவேறு...

வேறு நிலாக்கள் 
*****************

ஆப்பிரிக்காவிலிருந்துபேசுகிறேன் ...எழுதுகிறேன் ..
இதுவேறு குரல் ! வேறு மொழி
'வேறு"எப்போதும் வித்தியாசமாகவே   இருக்கும்.  

 நா.காமராசன், மு.மேத்தா,சிற்பி, கவிக்கோ,புலமைப்பித்தன்,,பூவைசெங்குட்டுவன், வைரமுத்து, துறவி,சக்திகனல், தமிழன்பன்,அறிமதிதென்னவன்,ஆலந்தூர்மோகனரங்கன் , முத்துலிங்கம் ,முத்துராமலிங்கம்,இன்குலாப்  இன்னும் சில கவியுலக  ஜாம்பவான்கள் கைப்பட எழுதித் தந்த கவிதைகள்"கறுப்புசூரியன்" என்ற தொகுப்பு நூலாக 1991ல் வெளியானது. அது1998 ல்மறு பதிப்பானது. நூலின் தலைப்பு தந்தது வைரமுத்து. இந்நூல் கறுப்பினத் தலைவன் மண்டேலாமற்றும் அடிமைத்தளை, வாழ்வியல், மானுடம்பாடிய  தொகுப்பு. 

2014ல் ''இவர்களால்சிலிர்க்கும் இயற்கை " ஓர் அடர்வனமாக விரிந்தது. அதன் மறுபதிவு 2017ல்  வரலாம்.  இதில் மேற்சொன்ன தமிழ்நாட்டின் முன்னணிக் கவிஞர்களில்  சிலர் மகிழ்ந்து அனுமதியளித்த கவிதைகளுடன், ஈழக்கவிஞர்களின் புகழ்பெற்ற  கவிதைகளுடன் , நம்தளத்தின் கிருத்திகாதாஸின் கவிதைகளும், எனது கவிதைகளும்  இடம் பெற்றிருந்தன.

கணப்பொழுதும்  நற்சிந்தனைகளுடன், கனவுகளுடன், ஏக்கங்களுடன் இத்தளத்தில் எழுதப்பட்டுவரும் மாறுப்பட்ட கவிதைகளை தொடராக மறுபதிவு செய்து 2016இறுதியில் ஒரு மாறப்பட்ட, நவீனமான,இதுவரை காணாத ஒரு நூலாக கொண்டுவரலாம் என்ற ஆசை பல நாட்களாகஇருந்தது.  அத்தோடு "யுகம்தாண்டும்சிறகுகள் "  தொகுப்பும் முழுவடிவம்பெற்றால் வெளிவரும்.  

கூடவே "சித்திரக்காரன்" 'பிறைசூடும்வானங்கள்" "ஒரு நதி நீந்துகிறது "


 நல்லசெயலை தள்ளிப் போடக்கூடாது அல்லவா?

இப்போதைக்குமுதற் சொன்ன மாறுப்பட்ட நேர்த்தியான கவிதைகள் "வேறு நிலாக்கள் " என்ற (TENTATIVE TITLE ) பெயரில்தொடராக வெளிவரும். (பின்னர்வேறு தலைப்பு கலந்தாலோசித்து தேர்வு செய்யப்படும்) எழுத்துத் தளத்தின் கவிஞர்கள் சரியான நேரத்தில்பதிவிடுவார்கள். சில கவிதைகள் அவர்கள் சார்பில் நான் வெளியிடக் கூடும். தளக்கவிஞர்களோடு முன்னணி கவிஞர்களின் அபூர்வமான சில படைப்புகளும் தொடருக்கு அணி சேர்க்கலாம்.
 
இது...“காட்சிப் பிழைகள், அதன்பின் வரப்போகும் அற்புதமான் ஹைக்கூ, லிமிரிக் தொடர்களைப் போல புதிய சிந்தனைகளைத் தூண்டி நல்லிலக்கியங்கள் படைக்கும் திருவிழா தொடரல்ல. .இது..ஓர் அமைதியான தியானம். வாரப்பத்திரிகையில் தொடராக வந்து பின்னர் நூலாக வரும்கதையைப்போல.  

எல்லோரும்  தங்கள் ஆலோசனைகளைத் தந்து , நீங்கள் ரசித்த மாறுப்பட்ட , உலகளாவிய,நேர்த்தியான கவிதைகளை எனக்கு மின்னஞ்சலில் சுட்டிக்காட்டினால், நான் அந்தப்படிப்பாளிகளை அணுகி பதிவிடச் செய்வேன். 

அற்புதமான உலகளாவிய /மாறுபட்ட,  கவிஞர்கள் / கவிதைகள் நம்மிடத்தில்.. 


இந்த நூலும் என்/ நம் கனவுகளில் ஒன்று.. 

தேவையானது ...உங்களின்ஆதரவும் ஊக்கமும் மட்டுமே. 

“நீங்கள் பழகிய அதே நிலாக்கள் ..
மீண்டும் வேறு வானத்தில்பார்க்கும்போது 
நிச்சயம் வேறு நிலாக்களாய்த் தெரியும் !” 

நேசத்துடன்,
கவித்தாசபாபதி  

நாள் : 17-Jan-16, 12:47 am

மேலே