யோசியுங்கள் மக்களே-01 -------------------------------------- உருவத்தால் அன்றித்தன் உள்ளடக்கம்,ஆம் கருவாலும்...
யோசியுங்கள் மக்களே-01
--------------------------------------
கருவாலும் செய்க கவி!
'கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றும் கொல்லோ உலகு',என்பர் - அம்ம! நீ
காடழித்தும், நிர்வழியும் காலழித்தும் வீட்டுமனை
போடா திருக்கப் பணி!
'உதவி வரைத்தன்று உதவி, உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து'ஆம் -அதனால்
இலவசம் பெற்று,ஏன் இழிபட வாழ்வோம்?
குல,நாசம் ஈதாய்க் குறி!
விழுப்பம் தரும்,ஒழுக்கம், வீண்சொலோ? ஊழல்
பழக்கமாய்ப் போனதே பார்!