எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கஸல் கவிதைத் தொடர் - காட்சிப் பிழைகள் ===========================================...


கஸல் கவிதைத் தொடர் - காட்சிப் பிழைகள் 

===========================================

எல்லா எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் எனது அன்பான / இதயப் பூர்வமான
நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்....

இந்த தொடரை மிகச் சிறப்பாக வழிநடத்திய தோழர் தோழமைகள் அனைவருக்கும் 
மற்றும் இதில் பங்கு பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும், இந்த தொடரை ஆங்கில மொழியாக்கம் 
செய்துக் கொண்டிருக்கும் கருணா சார் அவர்களுக்கும், இதில் ஆக்கப் பூர்வமான கருத்தளித்து சிறப்பித்த அகன் ஐயா மற்றும் சங்கரன் ஐயா அவர்களுக்கும் இதை தினந்தோறும் காலையில் காபியை மறந்தாலும் காட்சிப் பிழைகளை மறக்காமல் ஒரு எண்ணம் பதிந்து அதில் எழுதுவோரின் பெயரும் இதுவரை எழுதியவர்களின் பெயர்களையும் அழகாக குறிப்பிட்டு தொடர்ச்சியாக செய்த அன்பிற்குரிய ஐயா முரளி அவர்களுக்கும், இதில் பங்கு பெறா விட்டாலும் தினமும் படித்து எழுதுபவர்களை ஊக்கப் படுத்திய நல்ல உள்ளங்களுக்கும் இந்த நல்ல தருணத்தில் எனது உளமார நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்...

தனி தனி தீவுகளாய் சிதறிக் கிடந்த நமது தோழர் தோழமைகள் அனைவரும் இவ்வளவு உற்சாக மிகுதியோடு ஒன்றாக கூடி ஒரு திருவிழாவை கொண்டாடியது போல இந்த தொடரை சிறப்பித்து உள்ளனர்... நானே இதை இப்படி போகுமென எதிர் பார்க்க வில்லை... 
நான் சில தோழர் தோழமைகளின் கவிதைகளை வாசித்து விட்டு மிரண்டு போனேன் என்று தான் 
சொல்ல வேண்டும்... காரணம் இந்த தொடரில் அவர்கள் இப்படி எழுதுவார்கள் என்று நான் எதிர் பார்க்கவே இல்லை. இதுவரை அவர்கள் இப்படி எழுதி நான் பார்த்ததே இல்லை... எவ்வளவு பேர் ஒரு புது
முயற்சியை கையாண்டு உள்ளார்கள் என்று யோசிக்கும் போது உண்மையில் பிரமிப்பாக இருக்கிறது..

இப்படி பல திருப்பு முனைகளை கொண்டு இந்த தொடர் அரங்கேறி விட்டது... இந்த அரங்கேற்றத்தை பற்றி / தொடர் பற்றி நமது தள தோழர் ஒரு கட்டுரையும் எழுத போகிறார்... அந்த கட்டுரையில் இந்த தொடரில் எழுதிய அனைத்து கவிதைகள் மற்றும் கவிஞர்கள் பற்றிய ஒரு திறனாய்வே நிகழ்த்த போகிறார்... விரைவில் பதிக்கப் படும்... எதிர் பாருங்கள்... 

இதை இப்படியே விட்டு விடாதீர்கள் மேலும் பல தொடர்களை அளித்து நமது தள தோழர் தோழமைகளை
உற்சாக படுத்துங்கள் என்று பல பேர் என்னிடம் சொன்னதாலும் இன்னும் புதிது புதிதாக கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும் நமக்குள் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நல்ல நோக்கத்தினாலும் அடுத்த தொடர் கண்டிப்பாக கூடிய விரைவில் வர இருக்கிறது...

அந்த தொடர் ஹைக்கூ தொடராக இருக்க போகிறது...

எனது அடுத்த எண்ணத்தில் ஹைக்கூவைப் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் இருக்கும்...


வாழ்த்துக்கள்... 
வளர்வோம் வளர்ப்போம்...

பதிவு : ஜின்னா
நாள் : 31-Jan-16, 2:13 am

மேலே