எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

----------விளைநிலக் காட்சிகள் - 9 -------- - நானும்...

----------விளைநிலக் காட்சிகள் - 9---------

நானும் என் பட்டுப் பூச்செடிகளும்

விவசாய ஓய்வு நேரங்களில் நான் காணும் காட்சிகளை, எல்லோரின் பார்வைக்கு தரும் படங்களின் தொகுப்பு இது.

படம்:1
நான் காதலிக்கும் பட்டுப் பூச்செடிகள். இவற்றை பயிரிட்ட நாளிலிருந்தே பரிசு, பாராட்டுகள் பலவற்றை எனக்கு வாங்கித் தந்து, தன் சிரித்த சிவப்பு வண்ணத்தில் என்னையும் முகம் சிவக்க வைக்கும்  பட்டுப் பூச்செடிகள்.

படம்:2
 நடுப் பகல் மதிய நேரத்தில் பட்டுப் பூச்செடிகளின் அழகு. இதில் ஊடு பயிராய் என் கைவண்ணம் உயர்ந்து நிற்கும் வெண்டை செடிகள்.( எனக்கு வந்த யோசனையில் இதில் இன்னும் சில ஊடுபயிர்களாய் கத்தரி, வெங்காயம், மிளகாய் என பயிரிட்டு சாதித்ததை கட்டுரையாக  எழுதுவேன்)

படம்:3
சிவப்பு வண்ண பட்டுப் பூச்செடிகளோடு மஞ்சள் கலந்த தங்க வண்ண  மகள்களாய் செண்டு மல்லிப் பூக்கள்.

படம்: 4
இன்னொரு கோணத்தில் பட்டுப் பூச்செடிகளின் அழகு. தூரத்தில் முளைத்து நிற்கும் வீடுகள் விளை நிலங்களின் சிம்ம சொப்பனம்.  நாளையே அவை எங்களை வென்று விடலாம். இடையில் இருக்கும் தூரம் அதிகமில்லை. 
 

நாள் : 1-Feb-16, 12:55 am

மேலே