இன்னல்களின் உச்ச யாத்திரை என்னுள் அரங்கேறி என் இரவுப்...
இன்னல்களின்
உச்ச யாத்திரை
என்னுள் அரங்கேறி
என் இரவுப்
பொழுதுகள்
காவியனிந்து
மரண தூண்டலில்
என் நிம்மதி
காட்சியாகினும்
நான்
பைத்தியக்காரனாய்
அலைந்து திரிந்த
பின்னிரவுகளின்
மௌனச் சாலையில்
இரும்பிக்கொண்டே
புரண்டுப் படுக்கும்
கிழவனின் சத்தம்
என்னுள்
ஒரு திசை காட்டியை
மாட்டிச் செல்கிறது
- உதயா