எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முனைவர் பட்ட ஆய்வு நூலில் என் சிறு ஹைக்கூவைக்...

முனைவர் பட்ட ஆய்வு நூலில் என் சிறு ஹைக்கூவைக் இன்று கூகுளில்  கண்டேன் எதிர்பாராத விதமாக. 

//ஐயோ இருட்டிவிட்டதே 
என் செம்மறி ஆட்டை பார்த்தீர்களா
விடிந்தால் தீபாவளி.// 

என்ற எனது ஹைக்கூ ஒன்று 1991 ல் "சிகரங்களை நோக்கிய சிறகடிப்புகள் ' நூலிலும், பின்னர் சுஜாதா அவர்களால்  குமுதத்திலும் வெளியானது.  பின்னர் பல்வேறு சூழ்நிலைகளில், என், எழுத்து தளத்திலும் பதிவானது. பின்னாளில்  தீபாவளி யை திருத்தி பக்ரீத் என மாற்றியிருந்தேன்.

இந்தக் கவிதையை "ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு"  என்ன்ற நூலில் பரிமளம் சுந்தர் என்பவர் பயன் படுத்தியிருக்கிறார். பெயர் குறிப்பிடப் படவில்லை என்றாலும்.. ஓகே ..அறிஞர் ஒருவர்   பயன்  படுத்தியிருக்கிறார் . 

இதோ ..இணையத்தில் வந்த அந்தப்  பதிவு 
********************************************** 

ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு
பரிமளம் சுந்தர் அவர்களின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வாகச்செய்யப்பட்ட இந்த ஒப்பாய்வு நூலுருப்பெற்றிருக்கின்றது (கரோன் – நீரோன் பதிப்பகம் புரட்டாதி 2005). நூலை வாசிக்கும் போது நூலாசிரியர் இது சம்பந்தமாய் ஆய்வு செய்தார் என்பதைவிட தவம் செய்தார் என்பது தகுமெனலாம்.ஆறு தலைப்புகளாக ஆய்வு வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
1.ஜப்பானிய ஹைக்கூவின் தோற்றமும் வளர்ச்சியும்.
2.தமிழில் ஹைக்கூவின் வரவும் வளர்ச்சியும்
3.ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள்
4.தமிழில் ஹைக்கூ கவிதைகள்
5.ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் 
6.ஒப்பீடுமுடிவுகள்.
நல்ல ஹைகூசளை அடையாளம் காண முடிகின்றது. உதாரணத்துக்கு சில...

இரவெல்லாம் 
உன் நினைவுதான் 
கொசுக்கள்

ஐயோ இருட்டிவிட்டதே 
என் செம்மறி ஆட்டை பார்த்தீர்களா
விடிந்தால் தீபாவளி.

மேலும் இந்நூல் இரு மொழி கவிதைகளின் உள்ளடக்கம் உத்திகள் வேறுபாடுகள் பற்றியெல்லாம் பேசிச்செல்கிறது. முரண் உத்திகள் பற்றி தனி விளக்கம். ஹைக்கூ எழுத விரும்பகிறவர்களுக்கு நல்ல விளக்காமாய் இருக்கும் என நினைக்கின்றேன்.
நூலாசிரியர் பெண் என்பதால் நூலின் பல இடங்களிலும் பெண்மை தொட்டுச் செல்கிறது. தவிர்த்திருந்தால் நல்லது போல் தெரிகின்றது. உதாரணத்திற்கு

Though I have no love 
I too rejoice 
The change of clothes 

எனக்கொரு காதலனும் இல்லைஆனாலும் நான் மகிழ்ந்திருக்கிறேன் ஆடைமாற்றம்
யப்பானிய ஆடைமாற்ற திருவிழா பற்றிய ஹைக்கூ.. இங்கு காதலனுக்கு பதில் காதல் என மொழிபெயர்த்திருந்தால் சிறப்பாயிருக்கும் என்பது என் எண்ணம்.
பகிர :FacebookTwitterGooglePinterest
.


நாள் : 3-Feb-16, 9:41 pm

மேலே