எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆக்கிரமிப்புகளையும் விதி மீறல்களையும் அனுமதித்ததும், திட்டமிடாத வகையில் நகரம்...

ஆக்கிரமிப்புகளையும் விதி மீறல்களையும் அனுமதித்ததும், திட்டமிடாத வகையில் நகரம் வளர்வதைக் கண்டும் காணாமல் இருந்ததும்தான் இந்திய நகரங்களின் பெரும்பாலான இடர்களுக்குக் காரணமாக இருக்கிறது. மழைநீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பு, மரம் வளர்ப்பு, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் பராமரிப்பு, நடைமேடைகள் என்று நகருக்குரிய எல்லாவற்றையும் அமைத்து, அவற்றை மக்களுடைய ஒத்துழைப்புடன் நன்கு பராமரிக்க அரசு முன்வர வேண்டும். பழைய நகரங்களுக்கு அருகில் ஏற்படுத்தவுள்ள பொலிவுறு நகரங்களைச் சரியான முறையில் பழைய நகருடன் இணைக்க வேண்டும். பழைய நகரானாலும் பொலிவுறு நகரமானாலும் அதில் வாழும் மக்கள் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் தொல்லைகள் இல்லாமலும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்!

நாள் : 5-Feb-16, 8:01 am

மேலே