எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அகனார் அவர்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதம்., ஐயா, நடமாடும்...

அகனார் அவர்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதம்.,
ஐயா,


நடமாடும் நதிகளில் தாங்கள் கருத்துக்களில் பதிவு செய்த ஜப்பானிய ஹைகூக்கள் நான் இதுவரை கண்டிராதவை. அவை ஏற்படுத்திய சலனங்கள்  இனிமையானவை.

'பார் அந்த உழத்தி
நாற்று  நடுகிறாள்
 குழந்தை அழும் திக்கில் "

என்ற ஹைகூவின் ரிதம் என்னை மீட்டிக்கொண்டே  இருந்தது. அதன் விளைவாக  என்  ஹைக்கூ ஒன்றை அந்த ரிதத்தில் கொஞ்சம் மாற்றி அமைத்தேன்.  அது ஓர் அபூர்வமான படைப்பாகிவிட்டது.  ஒவ்வொரு நடமாடும் நதியிலும்  நீங்கள் சில பிறமொழி ஹைகூக்களை பதிவு செய்தால்  மனம் சிலிர்க்கும்.  பயன் மிக்கதாய் இருக்கும். 

தங்களுக்கு பல்வேறு நூல் உருவாக்கப் பணிகள் இருக்கலாம். 

சிறு கருத்து வேடுபாடுகள்  கருத்துப் பரிமாற்றங்களில் ஏற்பட்டிருக்கலாம். 

எதுவாக இருப்பினும் தாங்கள் மறந்து , சிறுது நேரமெடுத்து  தளம் வந்தால் களை கட்டும்.

பணிவோடு வேண்டுகிறேன் பொதுவான  குரலில்.

நாளை வரும் உங்கள் நற்கருத்துகள் மீண்டும் என்ற ஆவலுடன்,,
கவித்தா 

நாள் : 15-Feb-16, 9:33 pm

மேலே