கவிஞர் வாலி கவியரசர் கண்ணதாசனின் தாயாக மாறி அவரை...
கவிஞர் வாலி கவியரசர் கண்ணதாசனின் தாயாக மாறி அவரை தாலாட்டியது.பண் உறங்கும் நாவழகா, பனி உறங்கும்பூவழகா சேர சோழ பாண்டியரு, சேர்ந்து வந்தமூவழகா வீணையில பாட்டேழுப்பும் வாணி எந்தன்பிள்ளையென ஏணையில படுத்திருக்க என்ன தவம்செஞ்சேனோ இப்பிறப்பில் என் வயிற்றில் இப்படி ஓர்மகன் வரத்தான் எப்பிறப்பில் நேந்துகிட்டு எங்கெல்லாம்திரிஞ்சேனொ சாகரத்தில் எடுக்காம சங்கமத்தில்எடுத்த முத்தே மேக மழை கொடுக்காம தேக மழை கொடுத்தமுத்தே நன் முத்தை பழிக்கும்படி பல்முத்து முளைச்சவனே பல் முத்து முளைக்கும் முன்னே சொல் முத்து முளைச்சவனே தன்னாலும் தெரியாம சொன்னாலும் புரியாம அன்றாடம் அந்தியிலே விளக்கு வெச்சா உன்தகப்பன் சீட்டால தொலச்சுபுட்ட சில்லறையமொத்தமும் உன் பாட்டாலே சம்பாதி நீ பாரதியில்செம்பாதி பஞ்சான கால் மிதிச்சு பனிக்குடம்உடஞ்சதய்ய பூவான கை அணைச்சு பால் குடம்வழிஞ்சதய்ய தாய் பாலே நான் தருவேன் தலைப்பாலேமறைச்சபடி தமிழ்பாலே வள்ளுவன் தான் தருவான் நீவாங்கிக் குடி என் பாட்டு இந்நாளில் உன்ன மட்டும்உறங்க வைக்கும் உன் பாட்டு பின்னாளில் உலகம் மொத்தம்கேரங்க வைக்கும் எழுக்குப் பின்னால எட்டாகப் பிறந்தவனே கூழுக்குப் பாட்டெழுதாம கொழ்கைக்குப்பாட்டெழுது