எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கல்கியின் எண்ணம். கல்கி ஒரு பாடலுடன் ---செய்தி தொகுப்பு:...

கல்கியின் எண்ணம். கல்கி ஒரு பாடலுடன்   ---செய்தி 

    தொகுப்பு: மு. பவித்ரா
    கோ. நந்தினி படங்கள்: கோ. நந்தினி  
தற்சமயத்தில் பாலிவுட்டின் ‘லேடி' ரா.பார்த்திபன், க‌ல்கி கேக்லான்! காரணம், அவரின் சமீபத்திய வீடியோ ‘தி பிரின்டிங் மிஷின்' யூடியூபில் வெளியான சமயத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது.‘மார்கரிடா வித் எ ஸ்ட்ரா' உள்ளிட்ட பல வித்தியாசமான படைப்புகள் வழியாக ‘பாம்பேவாலா'க்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்.பெண்கள், இன்றைய செய்தித்தாள்களில் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எவ்வாறு வியாபரம் ஆக்கப்படுகின்றன என்பன போன்ற விஷயங்களை, 'டக். டகடக.. டக்...' என 'டைப்ரைட்டர்' ஒலியின் பின்னணியில் ‘பசக்'கென நம் மனதில் பதியவைக்கிறார் கல்கி.இந்த வீடியோவைப் பற்றிச் சில பெண்களிடம் கேட்டபொது அவர்கள் தங்கள் கருத்துகளையும் உணர்வுகளையும் அள்ளித் தெளித்தனர்.ஸ்ரீலதா, பேராசிரியர்வன்கொடுமையினால பெண்களுக்கு எற்படுற மனம் மற்றும் உடல் சார்ந்த கஷ்டங்களைப் பத்தி யாருமே நினைச்சுப் பார்க்கிறதில்ல. பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைப் பெரிசுபடுத்திக்காட்டுற மீடியா, அந்தக் கொடுமையினால பெண்களுக்கு ஏற்படுற உணர்வுகளைச் சொல்றதேயில்ல. காலையில நியூஸ்பேப்பர் படிக்கிறப்போ காபி சூடு மறையறதுக் குள்ள இந்த மாதிரி நியூஸோட சூடும் மறைஞ்சுடுது. இந்த நிலை மாற வேண்டும் என்பதுதான் கல்கியின் எண்ணம். என் எண்ணமும் கூட அதேதான்.பாரதி, கல்லூரி மாணவிமீடியா எப்படி இரக்கமே இல்லாம ‘இன் சென்ஸிடிவ்'வா நடந்துக்குதுனு சொல்லுற வீடியோதான் இது. இந்த மாதிரியான வீடியோலாம் இங்கிலீஷ்ல மட்டுமே வருது. இதை தமிழ்ல பண்ணுறதுக்கு யாரு இருக்கா? நாம‌ முன்வருவோமா?அபிராமி, இதழியல் மாணவிஇப்ப இருக்குற அவசர உலகத்துல நியூஸ்பேப்பர் படிக்கிறவங்கள்ல எத்தனை பேர், பிரின்ட் செய்யப்பட்ட நியூஸ் உண்மைதானான்னு பார்க்கிறவங்களா இருக்காங்கன்னு பார்த்தா அந்த எண்ணிக்கை ரொம்பவும் குறைவு. மத்தவங்க எல்லாரும் நியூஸ்பேப்பர்ல போடுற நியூஸ் உண்மைதான்னு ஆணித்தனமா நம்புறாங்க. கல்கி சொல்லியிருக்கிற‌ மாதிரி நம்ம‌ அடுத்த தலைமுறையினர் இதையெல்லாத்தையும் ஒரு ‘ஹிஸ்ட்டிரியா'தான் படிப்பாங்களே தவிர ஆராய்ச்சி செஞ்சி பார்க்க மாட்டாங்க.நிர்தியா, பின்னணி பாடகர்கல்கி கேக்லான் எப்போதும் கேமராக்களுக்கு மத்தியில் இருப்பவர். அதனால ஊடகங்களைப் பற்றி அவருக்கு அதிகமா தெரிஞ்சு வெச்சிருப்பார். இந்த வீடியோவுல குறிப்பா ‘ரீரிட்டன் ஹிஸ்ட்டிரிஸ்’ங்கிற‌ வரி எனக்குத் தனிப்பட்ட முறையில ரொம்ப‌வும் பிடிச்சிருந்தது.Keywords: க‌ல்கி கேக்லான், தி பிரின்டிங் மிஷின், யூடியூப் வீடியோ, மார்கரிடா வித் எ ஸ்ட்ரா

நாள் : 20-Feb-16, 1:47 am

மேலே