காலை வணக்கம் .. ஒரு கதை .. கிராமத்திலிருந்து...
காலை வணக்கம் ..
ஒரு கதை ..
கிராமத்திலிருந்து பட்டிணத்திற்கு வேலை தேடி வந்த ஒரு இளைஞன், மாநகர் பேருந்தில் ஏறி பயணித்துக்கொண்டிருந்தான். சற்று தூரம் சென்றபின் பேருந்தில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஏறி, ஒவ்வொரு பயணிகளிடமும் பரிசோதனை செய்தனர். பயணிகளில் இருவரிடம் பயணச்சீட்டு இல்லாதிருக்க, அவர்களை அபராதப்பணம் கட்டச் சொன்னார்கள். அவர்களிடம் பணம் இல்லாததால் இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் போவதாக சொன்னார்கள். இறுதியாக கிராமத்திலிருந்து வந்த இளைஞனிடம் பயணச்சீட்டு எங்கே என்று கேட்டார்கள். அதற்கு அவன், எந்த பாக்கெட் டிக்கெட் வேண்டும் என்று கேட்கவே ஒன்றும் புரியாமல் ஏதாவது ஒன்றைக் காண்பி என்றார். அந்த இளைஞன் ஒரு பாக்கட்டிலிருந்து பயணச்சீட்டு எடுத்து காண்பித்தான். சரி! ஆனால் இன்னொரு பாக்கெட்டில் என்ன இருக்கிறது என்று கேட்கவே அதுவும் டிக்கெட் தான் என்று கூற, ஒன்றும் புரியாமல் அதையும் காண்பிக்கும்படி கூறினர். அதுவும் அதே வண்டிக்கு அதே தேதியில் வாங்கப்பட்ட டிக்கெட். ஏன் தம்பி இப்படி பணத்தை வீணாக்குகிறாய் என்று கேட்டார். உடனே, அவன் "திருடர்கள் ஜாக்கிரதை" என்று எழுதியிருக்கும் அறிவிப்பை சுட்டிக்காட்டி, ஐயா, ஒன்று திருட்டுப் போனால் மற்றதைக் காண்பிக்கத்தான் என்று கூறினான். அவரும் சிரித்துக்கொண்டேஇரண்டுமே திருட்டுப் போனால் என்ன செய்வாய் என்று கேட்டார். அதற்கு அவன் நான் அப்படியெல்லாம் ஏமாற மாட்டேன். இதோ இந்தப் பெட்டியில் 3-வது டிக்கெட் வைத்திருக்கிறேன் என்று கூற எல்லோரும் சிரித்து விட்டார்கள். பிறகு, பரிசோதகரிடம், ஐயா .. ஒரு பயணத்திற்கு மூன்று பயணசீட்டுகள் என்னிடம் உள்ளன. பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யும் அவர்களுக்கு இதை கொடுத்து விடுலாமா என்று சொல்லுங்கள் என்றான்.