தாயா... தாரமா... தாயா...? தாரமா...? னு பெரிய பட்டி...
தாயா... தாரமா...
தாயா...? தாரமா...? னு பெரிய பட்டி மன்றமே நடந்துச்சு னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.அது ரொம்ப வருசத்துக்கு
முன்னாடி. ஆனா எல்லா வீட்டுலயும் இந்த கேள்வி இருக்கத்தான் செய்யுது. இருந்தும் பல ஆண்களுக்கு இதுக்கான விடை இன்னும் தெரியல என்பது தான் வேடிக்கையான விடயம்.
இங்க தாயா தாரமா னு ஒரு நாளும் முடிவெடுக்க முடியாது. எதுக்குன்னா ரெண்டுமே
பொம்பளைங்க வாழ்க்கைக்கு
அத்திவசியமானவங்க.
நடிக்க தெரியாத ஆம்பளைங்க வீட்டுல
பொம்பளைங்க
மத்தியில சமரசத்த உண்டு பண்ணவும் முடியாது சந்தோசமா வாழவும் முடியாது.
வேல முடிஞ்சு வீட்ட வரும் போது
தாயும் தாரமும் ஒவ்வொரு முறைப்பாட்டோட
இருப்பாங்க
இந்த நேரத்துல ரெண்டு பேருக்கும் இடையில கண்டிப்பா ஒவ்வொரு ஆண்களும்
சமரசத்தை உண்டு பண்ணனும். இதுபோல தான் பல சந்தர்ப்பங்கள் வரும் அப்போ
பிரச்சனைகள தீர்க்க ரெண்டு பேருக்கும் இடையில அவங்க புரியுற மாதிரி சொல்லி பிரச்சனைகள தீர்க்க பார்க்கணும்.
ஒவ்வொரு நாளும் எத்தனையோ பொய்கள சொல்றம். வீட்டுக்குள்ள பிரச்சனைய தடுக்க பொய் சொல்லி ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க முற்படுவோம்.
தாயும் வேண்டும் தாரமும் வேண்டும்.