தடை விதிக்கவேண்டும் @@@@@@@@@@@@@@@ அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்...
தடை விதிக்கவேண்டும்
@@@@@@@@@@@@@@@
அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றபின் அரசியல் கட்சிகளில் சேர்வதற்கு தடை விதிக்கவேண்டும். அத்தகையோர் தாங்கள் பதவி வகித்த காலத்தில் நேர்மையாகப் பணியாற்றி இருப்பார்களா என்ற ஐயம் நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்களுக்கு எழுவது இயற்கையே. முதல்வரின் கட்டளைப்படி மழை பெய்தது என்று ஒரு அதிகாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கல்வி அறிவு இல்லாதவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்கூட அது போல சொல்லமாட்டார்கள். இயற்கைக்கு யாரும் கட்டளையிட முடியாது என்பதை ஆறறிவு உள்ள அனைவரும் அறிவர். இப்படிப்பட்ட அதிகாரிகள் எப்படி நேர்மையாக இருக்கமுடியும் என்று மக்களும் ஊடகங்களும் கண்டனக் குரல் எழுப்பியதெல்லாம் மறக்கக்கூடிய விஷயங்கள் அல்ல.