எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தடை விதிக்கவேண்டும் 

 @@@@@@@@@@@@@@@
 அரசு அதிகாரிகள் மற்றும்  ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றபின் அரசியல் கட்சிகளில் சேர்வதற்கு தடை விதிக்கவேண்டும். அத்தகையோர் தாங்கள் பதவி வகித்த காலத்தில் நேர்மையாகப் பணியாற்றி இருப்பார்களா என்ற ஐயம் நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்களுக்கு எழுவது இயற்கையே. முதல்வரின் கட்டளைப்படி மழை பெய்தது என்று ஒரு அதிகாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கல்வி அறிவு இல்லாதவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்கூட அது போல சொல்லமாட்டார்கள். இயற்கைக்கு யாரும் கட்டளையிட முடியாது என்பதை ஆறறிவு உள்ள அனைவரும் அறிவர். இப்படிப்பட்ட அதிகாரிகள் எப்படி நேர்மையாக இருக்கமுடியும் என்று மக்களும் ஊடகங்களும் கண்டனக் குரல் எழுப்பியதெல்லாம் மறக்கக்கூடிய விஷயங்கள் அல்ல. 

மேலும்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று 5 ஆண்டுகள் பதவி வகித்தபின் பல்கலைக் கழகத்திற்குத் திரும்பி வந்து பதவி உயர்வு பெற்று துணைவேந்தருக்கு அடுத்த நிலை பதவியிலிருந்து பணி ஓய்வு பெற்று, தற்போது வேறு ஒரு கட்சியில் சேர்ந்துள்ளார். 29-Apr-2016 10:34 pm
நன்றி தோழமையே. மையப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ஒரு பேராசிரியர் பதவியில் இருக்கும் போதே ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்று பதவிக் காலம் முடிந்தபின் மீண்டும் பல்கலைக் கழகப் பதவிக்குத் திரும்பி வந்து பதவி உயர்வும் பெற்றார். சட்டம் அனுமதித்ததால் நடக்கும் சம்பவம் இது. மையப் பல்கலைக் கழகம் தன்னாட்சி பெற்ற நிறுவனம் என்றாலும் மைய அரசின் நிதியுதவியுடன் தான் செயல்படுகிறது. அப்பல்கலைக் கழக வாகனங்களில் கவர்ன்மென்ட் ஆஃப் இண்டியா என்று தான் எழுதப்பட்டுள்ளது. இது போன்ற செயலை அனுமதிக்கும் சட்டத்தை மைய அரசு விலக்கிக் கொள்ளவேண்டும். அதே போல் ஆளுங்கட்சி பரிந்துரை செய்யும் வழக்குரைஞர்களை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக நியமிப்பதும் நியாயமான செயலாகத் தெரியவில்லை. 29-Apr-2016 9:50 pm
சுட்டிக்காட்ட தகுந்ததே , வாழ்த்துக்கள் தோழமையே 29-Apr-2016 8:20 am

மேலே