எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேர்தல் நாள்: ஆப்ரஹாம் வேளாங்கண்ணி By dn: மும்பை...

தேர்தல் நாள்:
ஆப்ரஹாம் வேளாங்கண்ணி
By dn: மும்பை
First published: 16 May 2016
02.27 Pm IST.
                  ==+==
ஒவ்வொருவரின் தலையெழுத்தினை
எழுதுகிறவன் பிரம்மன்

ஒவ்வொரு நாட்டின்
தலையெழுத்தை எழுதுகிற
பிரம்மாக்கள் மக்களே
அந்நாளே தேர்தல் நாள்

பிரம்மன் ஒரு முறை
எழுதிவிட்டால் அவர்
மடியும்வரை திருத்தி
எழுதுவதில்லை என்பது
எல்லோரும் அறிந்ததே

இங்கே அவரவர் நாட்டின்
தலையெழுத்தினை மக்களாகிய பிரம்மாக்கள்
ஐந்தாண்டுக்கொருமுறை
எழுதும் வரம் பெற்றவர்கள்

ஆயினும் போட்டியாளர் அரசியல் எனும் கடலில் குதித்து வறட்சி வறுமை
எற்கின்ற செத்தையை அப்புறப்படுத்திடவே வாக்களித்திடுவர்

மாறாக உள்ளே மூழ்கி சுருட்டல் எனும் முத்தெடுக்க முற்பட்டு மூச்சு முட்டிப் போகாது  தங்கள்
கௌரவத்தையும் நாட்டின்
கௌரவத்தையும் காப்பாரென நம்புவோம்

வேட்பாளர் வாக்குகளை காசு கொடுத்து வாங்காது வாக்காளர் காசு வாங்கி வாக்கை விற்க்காது இருந்தால் நீதி நேர்மை நிச்சயம் நிலைத்திருக்கும் நம்புவோமாக•••!
•••

நாள் : 24-May-16, 9:30 pm

மேலே