அஹிம்சை" =+= இம்சையெனும் ஜலபிரளயத்தில் பாரதம் மூழ்கி தவித்த...
அஹிம்சை"
=+=
இம்சையெனும் ஜலபிரளயத்தில் பாரதம்
மூழ்கி தவித்த காலகட்டங்களில்,
அஹிம்சையெனும் அணைக்கட்டி,
வெள்ளைய வெள்ளம் வந்தவழியே,
வடிக்கட்டச் செய்தவர் காந்திமகான்,
அஹிம்சை எனும் விதை முளைத்து செடியானது,
செடி மரமானது, கிளைகளானது,
கிளைக்குக்கிளை விழுதுகள் தோன்றி, மரத்தைத் தாங்கிக்கொண்டது
வெற்றிக்கொண்டது
சுதந்திரமெனும் நிழலில்
பாரதம் தலைநிமிர்ந்து நிற்கலாயிற்று
•••
ஆப்ரஹாம் வேளாங்கண்ணி/ மும்பை