சாதி அமைப்பை வேரறுக்கவேண்டும் @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ சாதி அமைப்பால் வந்த...
சாதி அமைப்பை வேரறுக்கவேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாதி அமைப்பால் வந்த ஆயிரக்கணககான சாதிகளால் இன்று நாடெங்கும் பலவித
இன்னல்களுக்கு ஆளாகிறார் பலர். இறைவனின் படைப்புகளில் சமத்துமவே நிலவுகிறது.
செயற்கை விதிகளால் மக்களைப் பல கூறுகளாக வைத்திருப்பது ஒரு நல்ல சமுதாயத்திற்கு
ஒவ்வாத செயல். சாதிக்கொரு குருதி பிரிவில்லை, சாதிக்கொரு உடல் அமைப்பும்
இல்லை. உலகில் உள்ள அனைத்து மக்களும் 8 குருதி பிரிவுகளுக்குள் அடங்கவேண்டும்.
அடிப்படைத் தேவைகள் மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். நாட்டு நலனில்
உண்மையான அக்கறையுள்ள இந்து மதத் தலவர்களும், அரசியல் தலைவர்களும், சமூக
ஆர்வலர்களும் மனித நேயம் கொண்டவர்களாக இருந்தால் சாதிகளையும் சாதி
அமைப்பையும் வேரறுக்க தக்க சட்டம் இயற்ற முன்வரவேண்டும். சாதிகளும் சாதி
அமைப்பும் இருக்கும்வரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் சமூக
நீதீயும் சமத்துவமும் கிடைக்காது. நாட்டு நலனில் அக்கறையுள்ள அனைவரும்
சமுதாயத்தை கற்காலம் நோக்கி நகர்த்திச்செல்லும் கயவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.
பல சாதிகளாய் நாம் பிரிக்கப்பட்டுக் கிடந்ததால் தான் அந்நியர்கள் படையெடுத்து வந்து
நம்மை வீழ்த்தி அவர்கள் ஆட்சியை இங்கு நிலைநாட்ட முடிந்தது. அந்நியருக்கு பிரித்தாளும்
சூழ்ச்சியைக் கற்றுக்கொடுத்ததே இங்கு வேரூன்றி இருந்த சாதி அமைப்பும்
சாதிகளும் தான் காரணம். இனியேனும் மக்களை நிம்மதியாக வாழ வழி காட்டுங்கள்.
காட்டுமிராண்டிகளின் காலம் முடிந்து பல நூறு ஆண்டுகள் ஆகிறது, நாட்டுமிராண்டிகள்
இன்று ஆங்காங்கே தோன்றி அட்டூழியம் செய்வது ஒழிக்கப்படவேண்டும்/