எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீங்கள் யாரையாவது விரும்பினால் ! உங்களை நோக்கி வராமல்...

நீங்கள் யாரையாவது
விரும்பினால் !
உங்களை நோக்கி வராமல்  திசை மாறி போவார்களே யாகில் !
உங்களிடம் அழையாதீர்கள் போகவிடுங்கள் !

அவர்களாக திரும்பி உங்களிடம்  வந்தால் !
எப்போதும் உங்களுக்கு
உரியவர்கள் ஆவார்கள் !

அவர்களாக திரும்பி உங்களிடம் வரவில்லை
என்றால் !
ஒருபோதும்  உங்களுக்கு உரியவராகார் !

அங்கனம் போகிறவர்கள்
சிந்தித்தபடி நடப்பார்கள் !
நீங்கள்  அவர்களை அழைக்க அவர்கள்
சிந்தனை  சிதைந்துப்போக
உங்கள்மேல் சாடிடுவார்கள்!
அப்போது உங்கள் முகம்
மாறிப்போக !
அவர்கள் மீது நீங்களும் சாடுவீர்கள் !
பிறகு வாக்கு வாதம் முற்றிப்போகும் !
கைக்கலப்புவரை வரநேரும்
வீணாக  விரோதம் குரோதம்
என்றெல்லாம் உருவாகலாம்

சும்மா கிடந்த சங்கை  ஊதி
கெடுத்த கதையாகிவிடும்

நாள் : 3-Jul-16, 10:28 pm

மேலே