எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண் கல்விக்கு ஆதரவான குரல்கள் தற்போது அனைத்து தளங்களில்...

பெண் கல்விக்கு ஆதரவான குரல்கள் தற்போது அனைத்து தளங்களில் இருந்தும் ஒலித்து வரும் நிலையில், 68 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்விக்கு வித்திட்டவர் வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ்

எத்திராஜின் நினைவுகளை பகிர்ந்துகொண்ட அவரது குடும்ப வழியைச் சேர்ந்தவரும், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தற்போதைய தலைவருமான வி.எம்.முரளிதரன், “தனது திறமையை சின்ன வயதிலேயே எத்திராஜ் உணர்ந்துகொண்டார். சட்டம் படிக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்குள் எப்படியோ உருவாகியிருக்கிறது. காரணம் முன்மாதிரி என்று கருதுவதற்கு அவரது குடும்பத்தில் வழக்கறிஞர் யாரும் கிடையாது. அவர் வழக்கறிஞர் தொழிலில் அதிக பணம் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்ந்தாலும், அவரது மனதில் ஏதோ ஒரு திட்டம் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது.

ஆனால், வெளியே யாருக்கும் அது தெரியவில்லை. தனது சொத்துக்களை விற்று மகன்களுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டு என்பதற்காக மகளிர் கல்லூரியை தொடங்கினார். கார், ஆடம்பர வாழ்க்கை என்று ஒருவகையில் இருந்தாலும் மற்றொரு வகையில் கலை, இசை, இயற்கை மீது ஆர்வம், சமய ஈடுபாடு ஆகிய மென்மையான உணர்வுகளும் அவருக்குள் இருந்துள்ளன” என்றார்.

வெறும் 98 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட எத்திராஜ் மகளிர் கல்லூரி தற்போது 8 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவிகளுடன் ஆல்போல் தழைத்து வீறுநடை

நாள் : 20-Jul-16, 7:49 pm

மேலே