எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு சகோதரனின் ஆறுதல் வரிகள்---- பழனி குமார் அளித்த...

  ஒரு சகோதரனின் ஆறுதல் வரிகள்----

பழனி குமார் அளித்த எண்ணத்தில் நமது தளக் கவிஞர் ஷ்யாமளா ராஜசேகரின் 
மூத்த மகன் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த 
மன வேதனையும் அடைந்தேன் . 
ஷ்யாமளா ராஜசேகர் நல்லுள்ளம் படைத்த நற்கவிஞர் . பெண்பாற் கவிஞர்களில் 
வெண்பா புனைய வல்லவர் .அவருக்கு ஏன் இப்படியொரு துயரம் . 

கவிபுனையும் 
தாயுள்ளத்தின் கண்களில் 
கண்ணீரில் கவிதை 
ஏன் எழுதினாய் இறைவா ? 

சகோதரி ஷ்யாமளா ராஜசேகருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் இந்தத் தாங்கவொண்ணா 
துயர நேரத்தில் அனுதாபத்தையும் ஆறுதலையும் சொல்வதோடு அவர்கள் அனைவருக்கும் 
மன உறுதியை தரவேண்டும் என்று அன்னை அபிராமியை வேண்டுகிறேன் . 
----கவின் சாரலன்  

நாள் : 21-Jul-16, 3:03 pm

மேலே