கடவுளும் நியாயங்களும் கடவுளும் நியாயங்களும் ஒன்றே யாவருக்கும் ஒன்று...
கடவுளும் நியாயங்களும்
கடவுளும் நியாயங்களும் ஒன்றே
யாவருக்கும் ஒன்று போல் கிடைப்பதில்லை
கடவுளின் தரிசனமும் நியாயத்தின் கரிசனமும்
அவரவர், அவரவர் விருப்பம் போல்
சித்தரித்துகொள்ளலாம்
நியாயங்களையும் கடவுளையும்
பலவீனனின் ஒரே ஆயுதமும்
பலவானின் கடைசி பயமும்
இவர்கள் தான்
தன்னை நீருபிக்க முடியாத
நிராபராதிகளின் கடைசி குரலில்
அநீதி இலைக்கப்பட்டவனின்
ஆதங்க பெருமூச்சில்
நிராகரிக்கபட்டவனின் நெஞ்சுகொதிப்பில்
நிச்சயம் இவ்விருவருக்கும் இடம் உண்டு
"நியாயம் ஒன்னு இருக்கு" , "கடவுள்னு ஒருத்தன் இருக்கான்"
இத்தனை கால புறகணிப்புக்குப்பின்னும்
நீதிபதிகள் கடவுளாகி நியாயம் வழங்கிவிட மாட்டாரா என
சட்டத்தின் படிக்கட்டுகளிலும்
கடவுள் நீதிபதியாகி நியாயம் அளிக்கமாட்டார என
கோவில் வாசலிலும்
நம்பிக்கையோடு எம்மக்கள்
ஏனெனில் கடவுளும் நியாயமும் ஒன்று தான்
இரண்டையும் அழிக்கவே முடியாது
சத்யா