எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார் பகிர்க பிரபல தமிழ்க் கவிஞர்களில்...

கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்


பிரபல தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான ஞானக்கூத்தன் புதன்கிழமையன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது எழுபத்தி எட்டு

.

                 தமிழ்க் கவிஞர் ஞானக்கூத்தன்

     1938ல் மயிலாடுதுறையில் பிறந்த அவரது இயற்பெயர் ரங்கநாதன். 1968ல் கவிதைகளை எழுத ஆரம்பித்த ஞானக்கூத்தன், நவீன கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவர்.

சமகால சமூகத்தின் அபத்தத்தை அங்கதத்துடனும் எள்ளலுடனும் அணுகும் கவிதைகள் அவருடையது. மரபையும் நவீனத்துவத்தையும் கலந்த ஒரு மொழியில் தன் கவிதைகளை அவர் முன்வைத்தார்.

ழ, கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் ஞானக்கூத்தன் இடம்பெற்றிருந்தார்.

அன்று வேறு கிழமை, சூரியனுக்குப் பின்பக்கம், கடற்கரையில் சில மரங்கள், ஞானக்கூத்தன் கவிதைகள் ஆகியவை அவரது தொகுப்புகளில் சில.

கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

நாள் : 28-Jul-16, 9:04 am

மேலே