படித்தும் பணியில்லை? ஏன்?...... . ஒரு இரு சக்கர...
படித்தும் பணியில்லை? ஏன்?.......
ஒரு இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்க்கும் மெக்கானிக் ஒருவர் எனது ஸ்கூட்டியை சர்வீஸ் செய்து அதற்காக கொடுத்த ரசீது ஒன்றப் பற்றி......
5 ஆண்டு அனுபவம் உள்ளவர். எனது ஸ்கூட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுத்தான் அவரது சேவைக்கு (சர்வீஸ்) வண்டியை ஒப்படைத்தேன். அவரிடம் வேலை கற்றுக்கொள்வோர் இரு இளைஞர்கள். பெரும்பாலான வேலைகளை அவர்கள் தான் செய்வார்கள்.
நுணுக்கமான வேலைகளை மட்டும் அவர் செய்வார். பெட்ரோல் போட்டதாக அவர் எடுத்துக் கொண்டது ரூ. 50/- வாட்டர் சர்வீஸ் ரூ. 80/- லேபர் சார்ஜ் ரூ. 500/- மொத்தம் ரூ. 1910/- ரசீதில் உள்ள தொகை. 1910 – 630 = 1280) உதிரி பொருள்களுக்கும் எஞ்சின் ஆயிலுக்கும் ரூ. 1280/- செலவிட்டதாக கணக்குக் காட்டிகிறார்.
தொடர்ந்து ஒரே கடையில் உதிரி பொருள்களை வாங்கும் போது அவருக்கு சலுகை விலையில் கிடைக்கும். அதுமட்டுமின்றி உதிரி பாகங்களை விற்பவர்கள் மெக்கானிக் வேலை செய்பவர்களுக்கு பெரும்பாலும் ரசீது கொடுப்பதில்லை. இந்த மெக்கானிக் பேட்டரிக்கு அவர் தந்த பணத்திற்கு மட்டுமே ரசீது பெற்று வண்டி உரிமையாளருக்குத் தருகிறார். இதரப் பொருள்களுக்கு மெக்கானிக் தான் உதிரிப்பாகங்களை விற்பனை செய்பவருக்கு தந்த பணத்தைவிட அதிகத் தொகையை அவரது ரசீதில் எழுதிக்கொடுக்கிறார்,
உதவியாளர்களுக்கு தொழில் கற்றுக்கொள்ளுபவர்களுக்கு நாளொன்றுக்கு ஆளுக்கு நூறு ரூபாயையாவது தருவார்களா என்பது சந்தேகமே. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 வண்டிகளுக்காவது சர்வீஸ் பண்ணினால் கூட ஒரு நாள் வருமானம் ரூ. 8,000/- ஆவது இருக்கும்.
வாரத்தில் 61/2 நாட்களுக்கு பணியாற்றுகிறார். கடை வாடகை, மின் கட்டணம், உதவியாளர்களுக்குத் தரும் சம்பளம் தவிர அவரது மாத வருமானம் எவ்வளவு இருக்கும் எனபதைக் கணக்கிட்டுப் பாருங்கள். அவர் செலவிடும் நேரம், உழைப்பு எல்லாம் அதிகம் தான். உடல் உழைப்புள்ள தொழில் எதுவும் கேவலமான தொழில் இல்லை.
அதுபோலவே ஆர்வம் உள்ள ஒருவர் தையல் கலையை 6 மாதத்தில் கற்றிகொள்ளலாம். ஒரு தையல் கலைஞர் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இவர்கள் வருமான வரி செலுத்துகிறார்களா என்று தெரியவில்லை. இதர தொழில் நுட்பக் கலைஞர்களும் வாடிக்கையாளரைப் பலவழிகளிலும் ஏமாற்றிச் சம்பாதிக்கிறார்கள் என்பதையும் நாமறிவோம்.
குறைந்த மதிப்பெண் பெற்று கல்லூரிகளில் சேர்ந்து படித்தும் படிக்காமலும் பட்டம் பெருபவர்கள் பட்டதாரிகளுக்குத் தகுதியான வேலைகளில் சேரமுடியாது. பட்டம் பெறுவது எளிதான செயல் தான்.
படிக்கும் பாடங்களில் அடிப்படை அறிவே இல்லாதவர்கள்கூட முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.
1972-ல் 11-ஆம் வகுப்பில் 65% பெற்ற ஒருவர் ( எங்களுர் ஆரம்பப் பள்ளு ஆசிரியரின் மகன்) பிரிவு 4 எழுத்தர் பதவி போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று வருவாய்த் துறையில் பதவி கிடைத்து டெபுடி கலெக்டர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இன்றோ அத்தேர்வில் தேர்ச்சி பெற பட்டமேற்படிப்பில் முதல் வகுப்பில் (60%) தேர்ச்சி பெற்றவர்கள்கூட தடுமாறுகிறார்கள். எனவே பள்ளி ஆசிரியர்கள் படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவர்களை ஊக்கப்படுத்தி படிக்க வைத்தால் மட்டும் போதாது; ஏழை மாணவர்களில் குறைந்த மதிபெண் பெறுபவர்கள் தொழில் கல்லூரிகளில் சேர்ந்து கடன் வாங்கி 3 ஆண்டுகளை வீணடித்து படித்து பயனற்ற பட்டம் பெற்று வேலையற்றவர்களாக இருந்து வீணாவதைவிட எதாவது ஒரு தொழில் நுட்பத்தை செல்வின்றிக் கற்றிக்கொண்டால் நல்லது என்று அவர்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.
(நேரமின்மை காரணமாக சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அகராதியைப் பார்த்து என்னால் அச்சிட முடியவில்லை. அச்சுப் பிழைகள் இருப்பின் திருத்தி வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)