எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரிவுத் துயர், பிரிதொரு நாளில், வருமென்றால்,இந்த காதல் ஏன்?...

பிரிவுத் துயர்,

பிரிதொரு நாளில்,

வருமென்றால்,இந்த
காதல் ஏன்?

வந்து
தொலைக்கின்றது!

சொல்லி விட்டும் 
வருவதில்லை!

சொல்லிக் கொண்டும்
போவதில்லை!

ஏன் வந்தது என்று
தெளிவதற்குள்,

ஏன் போனது என்று
புரிவதில்லை!

பல காலமாய்,

பல காதலின்
நிலை

இதுவெனில் மீண்டும்,
மீண்டும்,

இந்த காதல் வந்து
தொலைக்கின்றதே!

காதலில் இது தான்
எழுதும் விதியா?அல்லது,

காதலிப்பவரின் விதியா?

(தெரிந்தவர் சொல்லுங்களேன்)
                     #sof #sekar

பதிவு : நா சேகர்
நாள் : 24-Aug-16, 10:28 am

மேலே