எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்மணியே ... கணபாராயோ... *********************************** மழை வரும் நாட்களிலெல்லாம்,...

கண்மணியே ... கணபாராயோ...
***********************************
மழை வரும் நாட்களிலெல்லாம்,
உன் குடை தேடி ஓடுவேன்....
உனைச் சேரா மழைத்துளிகளின்....சாபத்தைக் கேட்க!!

உறக்கத்தையெல்லாம் இரவுப் பலகையில் அழித்துப்பார்த்தும் ,
விடிந்து பார்க்கையில் கனவுகளால்  நிறைந்துவிடுகிறாய் ...மாயவளே !

நீ நடந்து போகையில்  ,
உன் நிழலை நிழற்படமாக பூமியே மாட்டிக்கொள்ள,
நானோ தெருமுனையில் கூசிப்போய் நின்றேன்... காதல் யாசகம் கேட்டு!

உன் கரம் சேர்க்கும் ஓர்  வரம் .....
என்  வாழ்க்கை வெல்லும் நிரந்தரம்.......
நீ சொல்லு ஒருதரம்.....
நொடிப்பொழுதில்   நம் சுயம்வரம்!!







பதிவு : பாரதி பறவை
நாள் : 26-Sep-16, 1:51 pm

மேலே