காலம் கடந்த போராட்டம்! @@@@@@@@@@@@@@@@ காவிரிப் பிரச்சனை சம்பந்தமாக...
காலம் கடந்த போராட்டம்!
@@@@@@@@@@@@@@@@
காவிரிப் பிரச்சனை சம்பந்தமாக காலம் கடந்த பின்னே தமிழக எதிர்க்கடசிகள்
போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.. அதுவும் உச்ச நீதிமன்ற வலியுறுத்தலை மத்திய அரசு
ஏற்க மறுத்தபின்பு. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே அறவழியில் தொடர்
போராட்டங்களை நடத்தியிருந்தால் கர்நாடகாவில் போராட்டங்கள் பெரிய அளவில்
வெடித்திருக்காது, பொருளாதார சேதத்தையும் தவிர்த்திருக்கலாம். இப்போது
எதிர்க்கடசிகள் ஒன்றுகூடி பிரதமரைச் சந்திப்போம், குடியரசுத் தலைவரை சிந்திப்போம்
என்கிறார்கள்.
@@@@
ஆறு மாதங்களுக்கு முன்பே எதிர்கடசித் தலைவர்களும் விவசாய
அமைப்புகளின்பிரதிநிதிகளும் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர், நீர்ப்பாசன
அமைச்சர், அரசு அதிகாரிகள், கன்னட அமைப்புகள், வீவசாய அமைப்புகளின் தலைவர்கள்
ஆகிய அனைவரையும் சந்தித்து தமிழக விவசாயிகளின் நிலைமையை தக்க
சான்றுகளுடன் விளக்கி இருக்கலாம். இந்த விஷயத்தில் ஆளுங்கடசி போதிய அக்கறை
காட்டவில்லை என்று அறிக்கைவிடடவர்கள் தமிழக மக்களின் நலன் கருதி அரசும்
ஆளுங்கடசியும் செய்யவேண்டியதை விவசாய அமைப்புகளும் எதிர்கட்சிகளும் செய்து
ஒரு சுமுகமான முடிவை பெற்றிருக்கலாம் .
@@@@@@@@@@@@@
தமிழக மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தாய்மொழிப் பற்றும், மொழி சார்ந்த
இனப்பற்றும் இருந்திருந்தால் "சாகும் போது சங்கரா" என்ற நிலை வந்திருக்காது.
@@@@
தமிழைத் தாயமொழியாகக் கொண்ட பெரும்பாலானவர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு
தமிழ்ப் பெயர்களை சூட்டுவதை விரும்பாதவர்களுக்கு மொழிப பற்றும் மொழி சார்ந்த
இனப்பற்றும் வருமா?
@@@@@
கன்னடர்கள். தெலுங்கர்கள். மலையாளிகளைப் பார்த்து நாம் நம்மைத் திருத்திக்
கொள்ளவேண்டும். மொழிப்பற்று இல்லாதவர்களிடம் ஒற்றுமை இருக்காது. ஒற்றுமை
இல்லாவிடில் மற்றவர்கள் நம்மை ஏளனமாகத்தான் பார்ப்பார்கள்.