மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக அப்பல்லோ...
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக அப்பல்லோ நிர்வாகம் பலமுறை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், அவர் கவனித்துவந்த துறைகளளை திரு. ஓபிஎஸ் அவர்களுக்கு வழங்குமாறு முதல்வர் கூறியதாகச் சொல்வதன் நம்பகத்தன்மை ஐயத்திற்கு உரியதே என்று முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் கூறுகிறார்.
இதற்கு அரசு அதிகாரப் பூர்வமான விளக்கத்தை தருவதே நல்லது. மாநில முதல்வர் நலம் பெற்று விரைவில் தனது பணியைத் தொடரவேண்டும் என்பதே தமிழக மக்களின் வேண்டுதல்.