வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை...
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசிவரை யாரோ.... இந்த வரிகளை நான் கேட்டிருக்கிறேன்.
எனக்குள் ஒரு கேள்வி நம்மோடு கடைசிவரை வருவது எதுதான் என்று. கடைசிவரை நம் கூடவே வருவது நாம் செய்த தான தருமங்கள் தான். மகாபாரதத்தில் ஒரு கட்டத்தில் அர்ஜுனன் தொடுக்கும் அம்பு எல்லாம் மலர்மாலைகளாக மாறி கர்ணனின் கழுத்தில் வந்து விழும்
ஆச்சரியமடைந்த அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரை பார்த்து இது என்ன விந்தை என கேட்பார்.
கிருஷணர் சொல்வார் கர்ணன் செய்த தான தருமங்கள் அவன் செய்த புண்ணியம் எல்லாம் அவனின் உயிரை காத்து நிற்கிறது என்பார். அதுபோல நாம் செய்யும் தருமங்கள் நல்ல காரியங்கள் எல்லாம் நம் கூடவே வரும் நாம் இவ்வுலகைவிட்டு மறைந்த பின்னும் நாம் செய்த இந்த நற்காரியங்கள் காலம் உள்ள வரை நம் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்.
தருமசிந்தனை நம்மை எல்லா இக்கட்டான சூழ்நிலையிலும் நம்மை காத்து நிற்கும்.