சில உண்மைகளை என் மனதின் எண்ணங்களோடு ஒப்பிட்டு பேச...
சில உண்மைகளை என் மனதின் எண்ணங்களோடு ஒப்பிட்டு பேச விழைகிறேன்.கவிதைகள், கதைகள், கட்டுரைகள்,நகைச்சுவைகள்,புதினங்கள்....என்ற பாதையில் ஆயிரம் இலக்கிய வடிவங்கள் மொழிகளின் கருவறைக்குள் இருந்து தொன்று தொட்டு வளர்ந்து வருகிறது.நடந்து கொண்டிருக்கும்இருபத்தியோராம் நூற்றாண்டில் தமிழ் மொழியை காக்கும் வீதம் குறைந்து போனாலும் தமிழை கொண்டு இலக்கிய வடிவங்களை காக்கின்றனவர்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகரித்து இருக்கிறது.அது மட்டுமின்றி பலரால் இலக்கியங்கள் தரங்கள் நாளுக்கு நாள் இழிவு படுத்தப்பட்டுக் கொண்டும் இருக்கிறது..சிலரால் யாரும் அறியாத மூளை முடுக்குகளில் பேணி காக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.
எழுத்து.காம் எனும் இலக்கிய தளமானது கரைகள் கடந்த பலரின் இலக்கிய வாழ்க்கைக்கு ஒரு அழகான களத்தையும் அமைத்துக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்..ஆனாலும் இன்றைய நிலவரத்தை பொறுத்தவரையில் முகநூல் என்பதன் மூலமே பலர் தமது ஆக்கங்களை உலகிற்கு
வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.,எமது தளத்தில் முக்கியமான பல தோழர்கள் நிறைவான கருத்துக்களை குறைவாக எழுதி உணர்த்தியவர்கள் (பெயர்கள் சொல்ல விரும்பவில்லை)
தளத்தை விட்டு விலகி முகநூல் மூலம் குழுக்களை உருவாக்கி பல இலக்கிய வடிவங்களுக்கு உயிரூட்டிக் கொண்டிடுக்கிறார்கள்..
நாளும் ஒவ்வொரு தலைப்பில் ஒரு கவிதை,வெண்பாக்கள் அமைக்கும்போட்டிகள் ,ஹைக்கூ, சென்றியூ போன்ற இன்னும் பல போட்டிகளை நடாத்தி வருகிறார்கள்..இதன் மூலம் இங்கே நிரந்தரமாக எழுதிக் கொண்டு இருந்த தோழர்கள் பலர் அங்கே முழுமையாக தஞ்சம் கொண்டு ஏனோ தானோ என்ற ரீதியில் ஏதாவது ஒரு நாள் மாத்திரம் அங்கு எழுதிய பல படைப்புக்களை இங்கே பதிவு செய்கிறார்கள்.இது மிகவும் சந்தோசமான செய்தி தான்.ஆனாலும் அங்கே முழுமையாக தங்கி இருக்கும் தோழர்களை பலரை இங்கே ஏன் முன்னரை போல் முழுமையாக இல்லாவிட்டாலும்
ஓரளவு தளத்தால் ஈர்க்க முடியாது உள்ளது என்பதே எனது வெளிப்பாடு..
திரு ஜின்னா,திரு.அகன்,திரு.முரளி போன்றவர்களின் ஒத்துழைப்பில் காட்சிப் பிழைகள் மற்றும் நடமாடும் நதிகள் போன்ற தொடர்கள் மாதக் கணக்கில் தோழர்களின் ஒத்துழைப்பபை பெற்று நடாத்தப்பட்டது..,ஆனாலும் அவர்கள் தளத்தை விட்டு நீங்கி சென்ற பின் இது போன்ற தொடர்கள் இன்றுவரை ஏதும் நடாத்தப்படவில்லை..நிறைவாக எழுதியவர்கள் பலரும் இன்றோ நாளையோ தளத்தை விட்டு நீங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உலாவி வருகிறார்கள்..ஏனென்று தெரியவில்லை
போட்டிகள் இங்கே திரு.சுரேஷ்ராஜா என்பவரால் மாதந்தோறும் நடாத்தப்படுகிறது..எழுத்தும் பல போட்டிகளை நடாத்துகிறது ஆனாலும் முடிவுகள் சில நியாயமான காரணங்களால் பின்னோக்கிச் செல்கிறது..அது மாத்திரமின்றி புதுமையான பல விடயங்களை தளம் செய்துள்ளது என்பதும் ஆரோக்கியமான மகிழ்வான விடயங்கள் தான்
காலம் காலமாய் பல இலக்கணங்கள் காக்கப்படும் வரிசையில் பல தளங்கள் உழைத்து வருகிறது அதில் எமது தளமும் முக்கியமானது..ஆனாலும் சில எண்ணங்கள் மனதோரம் தோன்றியது அதனால் இவ்வெண்ணத்தை பதிவு செய்தென்..யாரையும் வம்புக்கு மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காக நான் இங்கு இவ்வெண்ணத்தை பதிவு செய்யவில்லை..தோழர்கள்/சான்றோர்கள் உங்களது நிறைவான விமர்சனங்களை எழுதலாம்