எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ.... நீயானாய் நான் ஓவியன் நீ சித்திரமாய் மொழின்றி...

                     நீ.... நீயானாய்     


 நான் ஓவியன் 
 நீ சித்திரமாய் 
 மொழின்றி பேசுகிறாய்   

 நான் காவியன் 
 நீ கண்ணகியாய்  
 கனல் வீசுகிறாய்   

 நான் பேரரசன் 
 நீ மும்தாஜாய் 
நினைவில் வெளிப்படுகிறாய்     

 நான் பணக்காரன் 
 நீ லட்சுமியாய்  
 தாமரையில் ஒளி தருகிறாய்  

 நான் எழுத்தாளன் 
 நீ விழிகளில் 
 மைதீட்டி நின்றாய்   

 நான் வெற்றியாளன் 
 நீ வெற்றியாய் உன் கயல் விழியில் 
 கரைந்து போக செய்வாய்   

 நான் வலிமையானவன் 
 நீ உன் விழி அம்புகளால் 
 எளிமையாய் வீழ்த்துவாய்   

 நான் ஆகாயப்பறவை  
 நீ உன் சிறகுகளில் 
 என்னை அடைகாப்பாய்   

 நான் தோட்டம் 
 நீ வண்ணத்துப் பூச்சியாய் 
 வசீகரிப்பாய்   

 நான் முனிவன் 
 நீ நாட்டமில்லாதவனையும்  
 கனிய வைப்பாய்   

 நான் நிலம் 
 நீ செழிப்பான 
 பூங்காவனமாய் இருப்பாய்   

 நான் நீர் 
 நீ தாகத்தை  
 குளிரச்செய்வாய்   

 நான் நெருப்பு  
நீ பூத்திருப்பாய் 
 நீராய்   

 நான் காற்று 
 நீ கனிமரமாய் 
 தலையசைப்பாய்   

 நான் இசை 
 நீ 
மீட்டும் வீணையின் நாதமாவாய்   

 நான் ஓசை 
 நீ சத்தமில்லாமல் 
 சாகசம் செய்வாய்   

 நான் ஆகாயத்துக் கோள் 
 நீ கொள்ளமுடியாத நட்சத்திரமாய் 
 கண் சிமிட்டுவாய்   

 நான் பயணிப்பவன் 
 நீ வழிகாட்டியாய் 
 முன்னே நிற்பாய்   

 நான் குருடன் 
 நீ பார்வைக்கு 
 சோர்வைப் போக்குவாய்   

 நான் விருந்து 
 என்  எழுத்துக்களுக்கு 
 நீயே விருந்தாவாய்   

 நான் ஒளி 
 நீ 
நீயாகவே பிரகாசிப்பாய்  

 நான் விடியல் 
 நீ விடிவெள்ளியாய்  
 ஒளிந்திருப்பாய்   

 நான் முற்றுப்பெறாதவன் 
 நீ முற்றுப்புள்ளியாய் 
 முடிவுறச்செய்வாய்    

 நான் காது கேட்காதவன் 
 நீ காதலால் 
 மெல்லிய ஓசை எழுப்புவாய்   

 நான் வாய் பேசாதவன் 
 நீ மௌன மொழியால் 
 அபிநயம் செய்வாய்   

 நான் சுவாசிக்கும் போது 
 மல்லிகையாய்  
 மனம் வீசுகிறாய்   

 நான் மெய்சிலிர்க்கிறேன் 
 நீ 
பொய்யான கனவாய்ப் போனாய் ....

நாள் : 15-Nov-16, 8:44 pm

மேலே