கன்னடர்களுக்கு பணத்தட்டுபாடு இல்லையா?🎂 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு...
கன்னடர்களுக்கு பணத்தட்டுபாடு இல்லையா?🎂
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. உடனே கர்நாடகாவில் உள்ள அனத்து கட்சிகளும் கன்னட அமைப்புகள் மற்றும் மதம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றிணைந்து வன்முறையை அரங்கேற்றி அவர்கள் பண்பாட்டை வெளி உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டின.
நீர் திறந்தவிட இயலாது என்று முடிவெடுத்த பின்னர் எதற்காக வன்முறைப் போராட்டத்தை அரங்கேற்றினார்கள்.
நீங்கள் பேசும் மொழிக்கே எங்கள் தமிழ்தான் தாய் அங்குள்ள மெத்தப் படித்த மேதைகளுக்கே தெரியாது. கன்னட மொழியில் உள்ள தமிழ்ச்ச் சொற்களையும் திரிபு நிலையில் உள்ள தமிழ்ச் சொற்களையும் உதிர்த்துவிட்டு உங்களால் ஓரு வாக்கியத்தைக்கூட அமைக்க முடியாது என்பதை அங்குள்ள மொழியியல் "மேதை"களுக்கே தெரியாது. குறுகிய மனப்பான்மையும் அறியாமையுமே இதற்குக் காரணம்.
உச்ச நீதிமன்ற ஆணையை பலமுறை கர்நாடக அரசு மதிக்கவில்லை. தண்ணீர் திறந்துவிடவில்லை. உச்ச நீதி மன்றமும் மத்திய அரசும் கர்நாடக அரசைத் தக்க வகையில் கண்டிக்கவில்லை.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக தமிழர்களின் மீது ஏன் வெறித்தனமான வன்முறைத் தாக்குதலை நடத்தினார்கள்? ஒரு மத்திய அமைச்சர் கர்நாடகாவில் நடந்த வன்முறைக்கு தமிழர்கள் தான் காரணம் எனும் பொருள்பட அறிக்கை வெளியிட்டார்.
காலம் கடந்தபின் தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் சில போராட்டாங்களை நடத்தின. நமது போராட்டம் மகாத்மாவும் அய்யன் திருவள்ளுவரும் நமக்குக் கற்றுத் தந்த அறப்போராட்டம். இங்கு வன்முறை அரங்கேறவில்லை. கர்நாடக வாகனங்கள் எதையும் மூத்த குடிமக்களாம் தமிழர்கள் தீயிட்டுக் கொளுத்தவில்லை. கன்னடர்கள் யாரையும் தாக்குதலுக்கோ அவமானத்திற்கோ ஆட்படுத்தவில்லை. நாங்கள் தமிழர்கள் என்பதற்கு இதுவே தக்க சான்று.
உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தண்ணீர் திறந்துவிட மறுத்ததே தமிழர்களின் வயிற்றின் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல். அத்தோடு நிற்காமல் வன்முறையையும் அரங்கேற்றி ஆனந்தம் அடைந்தீர்கள். தமிழர்கள் கன்னடர்களுக்கு எதிராக எந்தக் கெடுதலையும் செய்யவில்லை.
இப்போது ₹ 1,000, 500/-நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் நடுத்தர மக்களும் ஏழைகளும் நாடெங்கும் பெருந்துன்பத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். எங்கள் மக்கள் படும் துன்பத்தை ஊடகங்கள் வழி அறிகிறோம். ஆங்காங்கே அறவழிப் போராட்டாங்களும் நடக்கின்றன.
கர்நாடக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையா? அது பற்றி தமிழ் ஊடகங்களில் செய்திகள் வருவதில்லையே. காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சனையில் உங்கள் மீது தவறு இருந்தும் வன்முறை வெறியாட்டம் போட்டீர்களே இப்போது மத்திய அரசால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டை கன்னடர்கள் ஏற்றுக் கொண்டீர்களா? உங்கள் கைவசம் ₹100/- 50/- 20/- 10/- 5/- நோட்டுகளும் நாணயங்களும் தேவையான அளவு உள்ளதா? நியாயத்தை எதிர்த்துத்தான் உங்களுக்குப் போராடத் தெரியுமா? தக்க ஏற்பாடு செய்யாமல் மத்திய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தும் ஆணை நியாயமானது தானா? இதற்கெல்லாம் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் காவிரி நீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராக வன்முறையை அரங்கேற்றீனீர்களே அது நியாயமா?