"நீண்டகால பயனைத்" தரவில்லை வரிசைகள் "நீண்டு கால் Pain...
"நீண்டகால பயனைத்" தரவில்லை
வரிசைகள்
"நீண்டு கால் Pain ஐ " தருகிறது...!
ஒரு மண்டலம் முடிந்துவிட்டது
மோடியேய்......!
பணம்
வரணும் i அப்பா!
- Cashless Citizens!
வல்லரசு ஆகும் முனைப்பில்
# "மண்" கி பாத்! #
"விவசாயிகளை" அறுவடை செய்துக் கொண்டிருக்கிறோம்....!
சாகுபடி செய்தவர்களைச்
சாகும்படி செய்துவிட்டோம்...!
விளைநிலங்களையெல்லாம்
"விலை" நிலங்களாக்கிவிட்டோம்...!
நம் வயிற்றுப்பசி தீர்த்தவர்களின்
"வாய்க்கு அரிசி" போடுகின்றோம்...!