ஈழத்து நண்பன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
முகநூலில்
ஒரு கவிஞனின்
கனவெனும் குழுமத்தில்
சுவாசக்காற்றை
உனது எழுதுகோலுக்கு
உரித்தாக்கி
நீ படைத்த ஒரு கவிதை
கண்களுக்குப் புலப்பட்டதும்
ஆழ்ந்து படிக்கலானேன்
அதைப் படிக்கப் படிக்க
எனதிதயம் கீறப்பட்டு
செங்குருதி சொட்டியது
அக்கவியால்
எனதிதயத்தில்
நட்பிற்கான
வெற்றிடத்தை
நிரப்பிவிட்டாய்…
என் கவிக்கு இன்று
அறிமுகம் தந்தவன் நீ
என்னில் ஆருயிராய்
நிறைந்து நிற்பவன் நீ
உனக்கும் எனக்கும்
இருக்கும் நட்பின் தூரம்
கோர்க்கப்படும்
பூவிற்க்கும் நூலிற்க்கும்
இருக்கும் தூரத்தை விட
சிறிது குறைவு தான்…
ஆனால்
நீ இலங்கையிலும்
நான் இந்தியாவிலும்
இருக்கிறோம்…
கவிமூலம்
அறிமுகமான முதல்
ஈழத்து நட்பு நீ
உன் கவி வரிகள்
என்னை ஈர்க்கிறது…
எப்பொழுதும் ஈழத்து
மண்மீது கால்பதிக்க
இறைவன் வந்து
எனக்கொரு
வரமளிக்கிறேன் என்றால்
இறப்பிற்கு முன்
ஒரு முறையாவது
உனை நேரில்
சந்திக்க வேண்டுமென்ற
வரம் கேட்பேன்
இனியொரு ஜெனனம்
இருக்குமென்றால்
உயிர் நட்புக்களான
நாங்கள் இருவரும்
ஒரே மண்ணில் பிறக்கும்
வரம் வேண்டுமென்பேன்…