கருணாம்பிகை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கருணாம்பிகை
இடம்:  கோவை
பிறந்த தேதி :  28-Dec-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Jan-2017
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  0

என்னைப் பற்றி...

அன்பை நேசிக்கும் அழகிய கவிதைப் பெண்

என் படைப்புகள்
கருணாம்பிகை செய்திகள்
கருணாம்பிகை - எண்ணம் (public)
08-Jan-2017 6:10 pm

கோடி கோடியாய்
பணம் கொட்டிக்கிடக்கு
அந்த மாடி வீட்டு மாலாவிடம்
ஆனால் தெருக்கோடியில்
வாழ்க்கை நடத்தும் தன் தோழி
சீதாவிடம் இருக்கும் புன்னகையை
விலை கொடுத்து வாங்க
முடியவில்லை...

மேலும்

கருணாம்பிகை - எண்ணம் (public)
08-Jan-2017 5:24 pm

பெண்வடிவில் 
பிரபஞ்சம் முழுவதும் 
உலா வரும் ஆண்தேவதைகள் 

பெற்றோர்களால் துஷ்டர்களாய்
துரத்தப்பட்ட துர்பாக்கியவதிகள்

குழந்தைகள் சுமக்கவியலாத
முலைப்பால் சுரவையில்லாத
கருப்பையற்ற தாய்கள்

சமூக நோயாளிகளினால்
பொது இடங்கள் யாவற்றிலும்
ஒரு நாயைப்போல் கல்வீசி
விரட்டியடிக்கப்படுபவர்கள்

உணர்வுகளையும்
உரிமைகளையும் இழந்து
உயிரற்ற ஜடங்களாய் வாழும்
இவர்களோ திருநங்கைகள்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இவர்களும் நம் போல் ஒரு உயிரினமே
உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை
வார்த்தைகளால் இதயங்களை இரணமாக்கமல் இருக்க முற்படுங்கள்
அவர்களுக்கு அரசாங்கம் சூட்டிய பெயர்
திரு நங்கை அதுவே மரியாதைப் பெயர்
அதை விடுத்து அவப்பெயர்களை சூட்டி
அவமானம் செய்யாதீர்கள் அவர்களுக்கு
அவப்பெயர்களை சூட்டும் மனிதத் தன்மையற்ற உங்களுக்கு நீங்களே
ஒரு பெயரை சூட்டிக் கொள்ளுங்கள்...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மேலும்

கருணாம்பிகை - எண்ணம் (public)
08-Jan-2017 10:33 am

உன் மனதில்
எனக்கு கிடைத்த
சிம்மாசனத்துக்கு
சாட்சியாய் 
நீ அளித்த மோதிரம்
நான் குப்பைத்தொட்டியில்
வீசி எரிந்தும் 
இன்னும் பத்திரமாய்
உனக்காக நான் எடுத்த
புகைப்படங்களில்....

மேலும்

கருணாம்பிகை - கருணாம்பிகை அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2017 9:25 pm

சாதி(தீ)யை 
ஒழிக்கிறேன் 
வேடம் போடுகிறாய்
வீட்டிற்கு வெளியே!

சாதி(தீ)யே உயிரென்று
வேதம் பாடுகிறாய்
மனதிற்குள்ளே!

மேலும்

உண்மைதான் தங்கள் கருத்துக்கு நன்றி 07-Jan-2017 12:59 pm
இது போன்ற இருதலை மனிதர்கள் இருக்கும்வரை... சாதியை ஒழிப்பது கடினம்தான். நாமும் ஒரு நடிகனைத்தானே தலைவனாய் தேர்ந்தெடுக்கின்றோம். திரைக்கு பின்னால் இருக்கும் திறமையானவர்களுக்கு யார் வைத்திருக்கின்றார் ரசிகர் மன்றம்? 06-Jan-2017 10:28 pm
கருணாம்பிகை - எண்ணம் (public)
06-Jan-2017 8:26 am

காலம் கிழித்துப்போட்ட
பக்கங்களை தேடி எடுக்க
நேரமில்லை எனக்கு
இலட்சியத்தை நோக்கி
ஓட மட்டுமே காலமிருக்கு

மேலும்

கருணாம்பிகை - கருணாம்பிகை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2017 9:25 pm

சாதி(தீ)யை 
ஒழிக்கிறேன் 
வேடம் போடுகிறாய்
வீட்டிற்கு வெளியே!

சாதி(தீ)யே உயிரென்று
வேதம் பாடுகிறாய்
மனதிற்குள்ளே!

மேலும்

உண்மைதான் தங்கள் கருத்துக்கு நன்றி 07-Jan-2017 12:59 pm
இது போன்ற இருதலை மனிதர்கள் இருக்கும்வரை... சாதியை ஒழிப்பது கடினம்தான். நாமும் ஒரு நடிகனைத்தானே தலைவனாய் தேர்ந்தெடுக்கின்றோம். திரைக்கு பின்னால் இருக்கும் திறமையானவர்களுக்கு யார் வைத்திருக்கின்றார் ரசிகர் மன்றம்? 06-Jan-2017 10:28 pm
கருணாம்பிகை - கருணாம்பிகை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2017 9:22 pm

ஜாதியென்ற
பெயரில் தன்னிலை
மறந்து மனிதனான
உம்மினத்தை
வெறித்தனமாய்
வேட்டையாடும் 
உன்னை ஐந்தறிவு
ஜீவனோடும்
ஒப்பிட முடியாத
சாக்கடையடா நீ ....

மேலும்

கருணாம்பிகை - கருணாம்பிகை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2017 8:59 pm

மழலை உருவில்
மனிதம் இங்கே
மலருதடா!

மடமை மனிதா
உன்னிடமிருந்த
மனிதம் மட்டும் 
எங்கே போனதடா!

விதியை வெல்லும்
எழுதுகோல் ஒன்று
என்னிடம் உள்ளதடா!

அதைக் கொண்டே
உன் மனதை மாற்ற
முற்படுவேன் நானடா!

மேலும்

கருணாம்பிகை - கருணாம்பிகை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2017 8:55 pm

ஈழத்து நண்பன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முகநூலில் 
ஒரு கவிஞனின் 
கனவெனும் குழுமத்தில் 
சுவாசக்காற்றை 
உனது எழுதுகோலுக்கு
உரித்தாக்கி 
நீ படைத்த ஒரு கவிதை
கண்களுக்குப் புலப்பட்டதும்
ஆழ்ந்து படிக்கலானேன்

அதைப் படிக்கப் படிக்க
எனதிதயம் கீறப்பட்டு
செங்குருதி சொட்டியது

அக்கவியால் 
எனதிதயத்தில்
நட்பிற்கான 
வெற்றிடத்தை
நிரப்பிவிட்டாய்…

என் கவிக்கு இன்று
அறிமுகம் தந்தவன் நீ 
என்னில் ஆருயிராய்
நிறைந்து நிற்பவன் நீ

உனக்கும் எனக்கும்
இருக்கும் நட்பின் தூரம்
கோர்க்கப்படும்
பூவிற்க்கும் நூலிற்க்கும்
இருக்கும் தூரத்தை விட
சிறிது குறைவு தான்…

ஆனால்
நீ இலங்கையிலும்
நான் இந்தியாவிலும்
இருக்கிறோம்…
கவிமூலம்
அறிமுகமான முதல்
ஈழத்து நட்பு நீ
உன் கவி வரிகள்
என்னை ஈர்க்கிறது…
எப்பொழுதும் ஈழத்து
மண்மீது கால்பதிக்க

இறைவன் வந்து 
எனக்கொரு
வரமளிக்கிறேன் என்றால்
இறப்பிற்கு முன்
ஒரு முறையாவது 
உனை நேரில்
சந்திக்க வேண்டுமென்ற
வரம் கேட்பேன்

இனியொரு ஜெனனம்
இருக்குமென்றால்
உயிர் நட்புக்களான
நாங்கள் இருவரும்
ஒரே மண்ணில் பிறக்கும்
வரம் வேண்டுமென்பேன்…

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே