நெருங்குகிறது அறுபதாவது நாள்….!! நவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள்...
நெருங்குகிறது அறுபதாவது நாள்….!!
நவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் நிலைமையோ வங்கி வாசல்களில் பசியோடும் பட்டினியோடும் தினமும் நிற்கின்ற அவலநிலையே தொடர்கின்றன. ஐம்பது நாளில் தீரும் என்றார்கள் அறுபது நாளை நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கும் இதே நிலைதான் தொடருமோ ? அதற்கு மேலும் தொடருமோ, மக்களின் இந்த அவதி / இன்னல்கள் அந்த ராமனுக்கு தெரியுமோ? இல்லை ராவணனுக்கு தெரியுமோ? தெரியாது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இவ்வளவு பெரிய பணநெருக்கடி நிலையை மக்கள் சந்தித்ததில்லை என்று பல பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். தற்போது, மக்கள் கொடூரமான பணவன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதே உண்மையென நடைபெற்று வரும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ந.க.துறைவன். AHK3y�s:8��