மனம் சரியில்லாதபோது எழுதுகோல் முன்வந்து எதையோ என்னை எழுத...
மனம் சரியில்லாதபோது
எழுதுகோல் முன்வந்து
எதையோ என்னை
எழுத வைக்கிறது..!
சிலநேரம்
என் வல்லமை காட்டும்
சிலநேரம்
என் பலவீனத்தை காட்டும்
சிலர்
இப்படி எழுதாதே !
அறிவுறுத்தி கண்டிப்பார்கள்.
பலர்
இப்படியும் எழுதுகிறாயே
பாராட்டி வாழ்த்துவார்கள்.
எனக்கு தேவை.!
உள்மன வலியை
வெளியேற்ற ஒரு வழி.
அதற்கு
இந்த கிறுக்கல் கவிதைகள்
ஒரு மந்திரக்கோல்.
மற்றவர்கள்
நம்மைப்பற்றி
எப்படி நினைக்கிறார்கள்
எப்படி பேசுவார்கள்
என்று நோக்கினால்
நாம் நாமாக இருக்க முடியாதே...!