எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இணையுமா இனியும் தமிழினம் ? ()()()()()()()()()()()()()()()()()()()()()()())()​()()() இதுதான் தமிழினம்...

  இணையுமா இனியும் தமிழினம் ?
()()()()()()()()()()()()()()()()()()()()()()())()​()()()


இதுதான் தமிழினம் ....
மாறிடுமா இந்த நிலை ..?
ஒன்றிடுமா இந்த இனமும் ​
இணையுமா இனியும் தமிழினம் ?மக்களில் பிரிவினை 
மதத்தில் பிரிவினை 
சாதியில் பிரிவினை 
தகுதியில் பிரிவினை 
அரசியலில் பிரிவினை 
கட்சிகளால் பிரிவினை 
அலுவலில் பிரிவினை 
உறவுகளில் பிரிவினை 
நட்புகளில் பிரிவினை 
ஊதியத்தில் பிரிவினை 
கொள்கையில் பிரிவினை 
தொழிலில் பிரிவினை 
நடிகர்களில் பிரிவினைஇதனால் பிரச்சினைகளும் பிரிகிறது 
இருவேறு முழக்கத்தை முன்வைத்து !கல்வியில் , இடஒதுக்கீட்டில் ,வேலையில் 
வாழ்கின்ற இடங்களில் , உடைகளில் , 
எண்ணத்தில் , ஏக்கத்தில் , விருப்பத்தில் .....
இப்படி அனைத்திலும் மாறுபட்டக் காட்சிகளே ..இன்றைய பொழுது ...பணமில்லா பரிவர்த்தனை 
சில்லறை , பாமரனுக்கு பணமில்லை , பதுக்கியவன் 
படுத்து உறங்குகிறான் பணத்தில் ..உழைப்பவன் வரிசையில் 
ஏய்ப்பவனுக்கு வங்கியே வீட்டில் ...!!!அடுத்து ஜல்லிக்கட்டு விவகாரம் ....அதிலும் இதே நிலைதான் .தமிழ் கலாச்சாரத்தை அழிப்பதிலும் போட்டி ..பிரிவினை ...!உணர்வுள்ளத் தமிழனும் ஒப்புக் கொள்வானா இதனையும் ...சிந்திக்க வேண்டும் ...தமிழன் என்றாலே ஏன் இந்த மாறுபாடு ..
மனமாச்சர்யம் ...கேவலமாய் நினைத்திடும் நிலை ....
இதற்கெல்லாம் அடிப்படை காரணமே ...
நம்மில் இல்லா ஒற்றுமையே ...புரிந்து கொள்வீரா ...சிந்தியுங்கள் ..சிதறாமல் ஒன்றிடுங்கள் ...இனம், மொழியை 
காத்திடுங்கள் .இன்றைய இளைய தலைமுறை நன்கு உணர வேண்டும் . 
வளர்ந்தவர்கள் , வயது முதிர்ந்தவர்கள் அவர்களுக்கு 
வழிவிடுதல் வேண்டும் ....ஆனால் அறவழியில் , அடுத்தவர்க்கு சிரமம் தராத வகையில் 
நம்மை யாரும் நித்க்காத வகையில் செயல்பட வேண்டும் .​இதுதான் தமிழினம் ....
மாறிடுமா இந்த நிலை ..?
ஒன்றிடுமா இந்த இனமும் ​
இணையுமா இனியும் தமிழினம் ?கவலையுடன் ஓர் தமிழன் 

பழனி குமார்  

நாள் : 15-Jan-17, 8:54 am

மேலே