ஏலே பித்துக்குளி - ஜல்லிக்கட்டு! ஜல்லிக்கட்டு 'ஏன்டா இந்த...
ஏலே பித்துக்குளி - ஜல்லிக்கட்டு!
'ஏன்டா இந்த ஜல்லிக்கட்டு விவகாரம்? '
"வீரத்தை வயிற்றினிலே,
வெடிமருந்தாய்
வைத்திருக்கும்,
சில சிங்கார தமிழனையும் ஓர்நாள் ,
ஏறிலே ,
கொஞ்சம் ஏற்றிவிட்டால்
தான் என்ன?
காலமெல்லாம்
காத்திருக்கும்,
காளைகளுக்கும்
ஓர் நாள்,
மையிட்டு,
மலர்சூட்டி,
கள் கொடுத்து,
கவிபாடி,
கூச்சலிட்டு,
குதிக்கவைத்து,
கொம்பைகொஞ்சம்
கூரிட்டு,
குரிபார்த்து,
வேண்டாத பல,
அரசியல்வாதிகள் மேலே,
மோத,
விட்டால்தான் என்ன?
நம்ம ஊராம் ,
தண்ணியில்லா,
அலங்காத குலுங்காத, நல்லூரையும்நயமாக,
ஓர் நாள்,
அரைஜட்டியுடன்
ஆர்வமுடன்
வந்திட்ட ,
அமெரிக்கனையும் அரவணைத்துஆடவைத்து,
நம்முடன்
குதிக்கவைத்தால்
தான் என்ன?
ஒரு நாள், கூத்துக்கு,
உலகமெல்லாம்
கூவலிட்டு,
வாழ்நாள் எல்லாமே
விரையமாவதுமுண்டோ?
மூளையில்லா நாட்டினிலே,
மாட்டிக்கிட்டோமேடா
பித்துக்குளி!
ஏர்பிடிக்கும்
ஏழைக்கு
குரல்கொடுக்க யாருமில்லை!
நாட்டிலிருக்கும் பிரச்சனையிலே,
மழைபெய்யா, பூமியிலே,
விஷமருந்தி விவசாயி, விடைஎடுக்கும் வேதனையிலே,
கயவர்கள்,
காவிரியை தடுத்துவிட்ட போதினிலே,
ஏறுஏற,
எங்கிருந்து மனம்வரும் தெரியலைடா,
பித்துக்குளி !
வீரத்தை காட்டிட
வேருவழி இருந்தாலும்,
ஏறுவழியை காட்டிடவே,
துடி துடிக்கும்
தமிழனையும்,
அனைத்து ப்போக
அறிவில்லை!
பாடத்தை படிக்காமல்
பவனிவரும் மக்கட்க்கு
கருத்துக்கூற ஆளில்லை!
கோடீஸ்வரன்
பிள்ளைகள்,
எப்படியும் தேரிடுவான்!
தெருவோரம் கடைவிரித்து
காலமெல்லாம்
பூ வித்து,
மாரியப்பனையே நம்பிநிற்க்கும்
மதிப்புமிக்க தாய்கட்க்கு
கருணைகாட்டஆளில்லை!
காலத்தை வீணடிக்காமல், பாடம் கொஞ்சம் படித்திடடா, பைத்தியக்கார பித்துக்குளி! "