எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனை செய்மனமே...8 வாதமும் சம்வாதமும்..(an argument and discussion)...

சிந்தனை செய்மனமே...8   


வாதமும் சம்வாதமும்..(an argument and discussion)


வாதத்துக்கும் (argument) சம்வாதத்துக்கும் (discussion) நிறைய வேற்றுமை உண்டு. 

வாதத்தைவிட சம்வாதத்தில் அதிக பலன் உண்டு. 

வாதம்  என்பது ஒருவருக்கொருவர் முன்வைக்கின்ற விமர்சனம் என்று சொல்லலாம். வாதத்தின்த்தின்போது தேவையற்ற விமர்சனங்கள் எழுவதும் உண்டு. தருக்க வாதத்தால் வரும் காட்டமான எண்ணங்களால் மனஸ்தாபம் வரக்கூடிய சந்தர்ப்பம் எழுகிறது. "நான் சொல்வது மட்டும்தான் சரியானது" என்று நினைப்பவர்களே பெரும்பாலும் வாதத்தில் ஈடுபடுவார்கள். ஆக வாதத்தினால் வீணான மனக்கசப்பை சம்பாதிக்கும் நிலை ஏற்படும்.

சம்வாதம் என்பது கலந்துரையாடுதல் எனப் பொருள்படும். கலந்துரையாடுதல் என்பது எண்ணங்களின் பரிமாற்றம் எனவும் சொல்லலாம். ஒருவருக்கு ஒரு விஷயம் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கலாம் அது மற்றொருவருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆக, ஒரு விஷயத்தைப் பற்றி கலந்துரையாடும் போது, அவ்விஷயத்தைப் பற்றிய தெரியாத பல உண்மைகள் வெளிவரும். 

ஏதாவதொரு விஷயத்தைப் பற்றி, யாராவது நம்மிடையே பேசும்போது, நாம் அதைப்பற்றி தருக்கவாதம் செய்யாமல், அவ்விஷயத்தைப் பற்றிய நமக்குத் தெரிந்த ஏதாவதொன்றை எடுத்துச் சொல்லி கலந்துரையாடுவதை நம் வழக்கமாகக் கொண்டால் ஒருவருக்கொருவர் இடையே எழும் தேவையற்ற சர்ச்சைகள் இறாது.

எல்லோராலும் பரவலாக ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு கருத்துக்கு எதிரான மாற்றுக் கருத்து வரும்போது, அங்கே அக்கருத்துக்கிடையே “வாதம்” எழுகிறது.

அதே கருத்தை முன்வைத்து பலராலும் ஆராயப்படும்போது அது கலந்துரையாடல் அல்லது “சம்வாதம்” என்றாகும். 

தற்போது செய்திகளுக்குப் பதில் விவாதமேடை என்பது அதிக அளவில் ஊடகங்களிலும், தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பக்கூடிய நிகழ்ச்சி ஒன்றை, வாதம், சம்வாதம் இரண்டுக்குமே உதாரணமாகச் சொல்லலாம்.

நாள் : 5-Feb-17, 10:04 am

மேலே