எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் சென்னையில் வேலை பார்த்து வருகிறேன்.நாங்கள் தங்கி இருக்கும்...

நான் சென்னையில் வேலை பார்த்து வருகிறேன்.நாங்கள் தங்கி இருக்கும் பகுதி பஸ் நிலையத்தின் நடைமேடை (bridge)க்கு கீழே ஒரு குடும்பம் தங்கி உள்ளது.கணவன்,மனைவி,மூத்த பையன்(கிட்டதிட்ட 18 வயது),இளைய மகன் (10 வயது) மற்றும் கை குழந்தை ஒன்று.அனைவரும் செய்யும் தொழில் யாசகம்(பிச்சை) பெறுவது.

கணவன்,மனைவி,மூத்த பையன் இவர்கள் நினைத்தால் சாலையோரம் சிறு தொழில் ஏதேனும் செய்து வாழலாம்.ஆனால் வேலை செய்வது,அவர்களுக்கு தெரியாத ஒன்று போலும்.அந்த சின்ன பையன் மற்றும் பிஞ்சு குழந்தை வாழ்க்கை நாளை ....?.இப்படி வாழ்க்கை நடத்தும் அவர்களுக்கு குழந்தைகள் இத்தனை எதற்கு என நினைத்தால் ,எனக்கு அவர்கள் மூவரையும்(மூத்த பையன் உள்பட) சொல்ல முடியாத தண்டனை எல்லாம் கொடுக்க வேண்டும் என தோன்றும்.இது சரியா.?.இதுவும் வாழ்க்கையா ..?.இவர்களை என்ன செய்யலாம்.?

பதிவு : அர்ஜுனன்
நாள் : 29-Mar-14, 11:36 pm

மேலே